Home Featured நாடு மாறும் அரசியல் – அன்வார் விடுதலைக்காக மகாதீர் கையெழுத்து!

மாறும் அரசியல் – அன்வார் விடுதலைக்காக மகாதீர் கையெழுத்து!

782
0
SHARE
Ad

ஷா ஆலாம் – இங்கு நடைபெற்று வரும் பிகேஆர் கட்சியின் ஆண்டு மாநாட்டில் இன்று ஞாயிற்றுக்கிழமை கலந்து கொண்ட முன்னாள் பிரதமர் துன் மகாதீர் முகமட், அங்கு அன்வார் விடுதலைக்காக நடத்தப்பட்ட கையெழுத்து இயக்கத்தில் கலந்து கொண்டு ஆதரவாகக் கையெழுத்திட்டார்.

ஏற்கனவே, அன்வாருடன் நெருக்கம் பாராட்டி வரும் மகாதீர், தனது புதல்வர் முக்ரிஸ் மகாதீருடன் இன்றைய பிகேஆர் மாநாட்டில் கலந்து கொண்டார்.

mahathir-sign petition-free anwar-21052017

#TamilSchoolmychoice

“அன்வாரை விடுதலை செய்யுங்கள்” இயக்கத்தை ஆதரித்து கையெழுத்திடும் மகாதீர்…(படம்: நன்றி – ஸ்டார் இணையத் தளம்)

ஒரு காலத்தில் கடும் அரசியல் போராட்டத்துக்கிடையில் அன்வார் மீது குற்றம் சுமத்தி அவரை சிறைக்கு அனுப்பியவரே மகாதீர்தான்.

ஆனால் இப்போது மாறி வரும் அரசியல் சூழ்நிலைகளுக்கேற்ப, பிரதமர் நஜிப்பை வீழ்த்துவதற்காக மகாதீரும், அன்வாரும் இணைந்து கைகோர்த்திருக்கின்றனர்.

ஜசெக தலைவர் லிம் கிட் சியாங், பெர்சாத்து கட்சித் தலைவர் மொகிதின் யாசின் ஆகியோரும் இன்றைய பிகேஆர் கட்சி மாநாட்டில் கலந்து கொண்டனர்.