Home Featured கலையுலகம் விரைவில் ‘விஸ்வரூபம் 2’ திரைப்படத்தின் பாடல் வரிகள் – கமல் அறிவிப்பு!

விரைவில் ‘விஸ்வரூபம் 2’ திரைப்படத்தின் பாடல் வரிகள் – கமல் அறிவிப்பு!

961
0
SHARE
Ad

Viswarupam2சென்னை – உலகநாயகன் கமல்ஹாசன் இயக்கத்தில் உருவாகியிருக்கும் ‘விஸ்வரூபம் 2’ திரைப்படத்தின் பாடல்கள் மிகச் சிறப்பாக வந்திருப்பதாகவும், விரைவில் அதன் பாடல் வரிகளை வெளியிடவிருப்பதாகவும் கமல்ஹாசன் தனது டுவிட்டர் பக்கத்தில் அறிவித்திருக்கிறார்.

இது குறித்து டுவிட்டர் பக்கத்தில் கமல் வெளியிட்டிருக்கும் தகவலில், “விரைவில் விஸ்வரூபத்தின் பாடல் வரிகள் உங்கள் பார்வைக்கு இங்கே. மனதைத் தொற்றிப் பிடிக்கும் இசை . நன்றி ஜிப்ரனுக்கும் பாடகர்களுக்கும்” என்று தெரிவித்திருக்கிறார்.

மேலும், இந்தியில் ஜோஷியும், தமிழில் தானும் பாடல் வரிகளை எழுதியிருப்பதாகவும் கமல் குறிப்பிட்டிருக்கிறார். விரைவில் தெலுங்கிலும் பாடல்களைப் பதிவு செய்யவிருப்பதாகவும் கமல் தெரிவித்திருக்கிறார்.

#TamilSchoolmychoice

‘விஸ்வரூபம் 2’ திரைப்படத்திற்கு இசையமைப்பாளர் ஜிப்ரான் இசையமைத்திருக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது.