Home Featured கலையுலகம் ‘அழல்’ – மலேசியா, சிங்கப்பூர் கூட்டணியில் புதிய திரைப்படம்!

‘அழல்’ – மலேசியா, சிங்கப்பூர் கூட்டணியில் புதிய திரைப்படம்!

1287
0
SHARE
Ad

Azhal4கோலாலம்பூர் – சிங்கப்பூர் இயக்குநர் சரவணன் இயக்கத்தில், ஜெ.அரவிந்த் நாயுடு கதாநாயகனாக  நடித்திருக்கும் ‘அழல்’ என்ற புதிய திரைப்படம் மிக விரைவில் வெளியாகவிருக்கிறது.

‘அழல்’ என்றால் நெருப்பு என்ற அர்த்தம். இத்திரைப்படத்தில் சிங்கப்பூரைச் சேர்ந்த அரவிந்த் நாயுடு மிரட்டலான காவல்துறை அதிகாரியாக நடித்திருக்கிறார்.

இந்த ஆண்டு தொடக்கத்தில் தொடங்கப்பட்ட இத்திரைப்படம், மலேசியா, சிங்கப்பூரின் முக்கிய இடங்களில் படப்பிடிப்புகள் நடத்தப்பட்டு, தற்போது வெற்றிகரமாக கடந்த ஞாயிற்றுக்கிழமை நிறைவு பெற்றிருக்கிறது.

#TamilSchoolmychoice

Azhalmovieஇத்திரைப்படத்தில் சிங்கப்பூர், மலேசியா என இரு நாடுகளைச் சேர்ந்த 100-க்கும் மேற்பட்ட கலைஞர்கள் பணியாற்றியிருக்கின்றனர்.

டத்தோ ஷாஷா ஸ்ரீ, யாஷினி தேவி, ஹேடான் ரோய், ‘கீதையின் ராதை’ புகழ் ஜிகிராக் கர்ணன், அஜய் ராம்குமார், ஜிதென்ராம் கிரண் பாலா, செண்பகன் சன்னாசி, எம்ஜி விஜய், ஷான் சத்தியசீலன் உள்ளிட்ட கலைஞர்களும் இத்திரைப்படத்தில் முக்கிய வேடத்தில் பணியாற்றியிருக்கின்றனர்.

Azhal2சிங்கப்பூரைச் சேர்ந்த ரூபேஸ் ராதாகிருஷ்ணன் இசையமைத்திருப்பதோடு, ஒளிப்பதிவும் செய்திருக்கிறார்.

மலேசியக் கலைஞரான விஜய் எமெர்ஜென்சி, ஆதித்யன் மெகானாதன் மற்றும் ரூபராஜ் ஆகியோர் இணைந்து இத்திரைப்படத்தைத் தயாரித்திருக்கின்றனர்.

Azal1விரைவில் இத்திரைப்படத்தின் முன்னோட்டமும், தனிப்பாடல் ஒன்றும் வெளியாகவிருக்கிறது என்பதோடு, மலேசியாவில் இத்திரைப்படத்தின் இசை வெளியீடும் நடைபெறவிருப்பது குறிப்பிடத்தக்கது.