இது குறித்து வேள்பாரி கூறுகையில், “பெர்காசாவால் நியமனம் செய்யப்பட்டிருக்கும் வழக்கறிஞரிடமிருந்து எனக்கு சட்டப்பூர்வக் கடிதம் வந்தது. அவர்கள் சில நாட்களுக்கு முன்பே அதனை அனுப்பிவிட்டதாகத் தெரிவித்திருக்கின்றனர். ஆனால் அது எனக்கு இன்று தான் கிடைத்தது. அதன் நகலை எனக்கு வழக்கறிஞர் குழுவான மெசர் குமார் & பார்ட்னர்சுக்கு அனுப்பியிருக்கிறேன். எனது பக்க நியாயத்தைச் சொல்ல இது ஒரு வாய்ப்பாக இருக்கும்” என்று தெரிவித்தார்.
மேலும், தான் இஸ்லாம் சமயம் பற்றி எந்த ஒரு அவதூறான கருத்துக்களையும் கூறவில்லை என்றும் வேள்பாரி தெரிவித்தார்.”நமது அரசியலமைப்பு உரிமைகளில் உள்ள புனிதத்தன்மையின் படி, எந்த ஒரு மதத்தையும் தேர்ந்தெடுத்து பின்பற்றி வழிபட முடியும் என்பதை நம்புகிறேன்”என்றும் வேள்பாரி கூறினார்.