Home Featured இந்தியா மோடி – எடப்பாடி பழனிச்சாமி சந்திப்பு நிறைவு!

மோடி – எடப்பாடி பழனிச்சாமி சந்திப்பு நிறைவு!

798
0
SHARE
Ad

Modi-Palanisamy meetupபுதுடெல்லி – தமிழக முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி இன்று புதன்கிழமை புதுடெல்லியில் பிரதமர் நரேந்திர மோடியைச் சந்தித்துப் பேசினார்.

பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய எடப்பாடி பழனிச்சாமி, காவிரி மேலாண்மை வாரியத்தை விரைவில் அமைப்பது, பவானி ஆற்றில் கேரள அரசு அணை கட்டுவதை தடுக்க நடவடிக்கை, நீட் தேர்வில் இருந்து விலக்கு அளிக்க மறுபரிசீலனை, இலங்கை கடற்படை கைது செய்த 11 மீனவர்கள், 135 படகுகளை விடுவிக்க நடவடிக்கை உள்ளிட்ட கோரிக்கைகள் அடங்கிய மனுவை தான் மோடியிடம் சமர்ப்பித்ததாகத் தெரிவித்தார்.

இதனிடையே, தமிழக அரசியல் சூழல் பற்றி பிரதமரிடம் பேசினீர்களா? என்று செய்தியாளர்கள் கேட்க, மோடியிடம் அரசியல் பற்றி எதுவும் பேசவில்லை என்று பழனிச்சாமி பதிலளித்தார்.