Home Featured இந்தியா குடியரசுத் தலைவருக்குப் போட்டியிடவில்லை – பிரணாப் அறிவிப்பு!

குடியரசுத் தலைவருக்குப் போட்டியிடவில்லை – பிரணாப் அறிவிப்பு!

877
0
SHARE
Ad

pranab-mukherjeeபுதுடெல்லி – அடுத்த மாதத்துடன் தனது பதவிக்காலம் நிறைவடைவதையடுத்து, அடுத்த முறை குடியரசுத்தலைவர் பதவிக்குத் தான் மீண்டும் போட்டியிடப் போவதில்லை என நடப்பு குடியரசுத் தலைவரான பிரணாப் முகர்ஜி அறிவித்திருக்கிறார்.

தற்போது தேர்தலில் போட்டியிடும் வேட்பாளரை தேர்வு செய்ய ஆளும்கட்சியான பாஜக-வும், எதிர்கட்சிகளும் களத்தில் இறங்கியிருக்கின்றன.

இந்நிலையில், குடியரசுத் தலைவர் பிரணாப் பேசுகையில், “ராஷ்டிரபதி பவனுக்கு மீண்டும் திரும்பும் எண்ணம் எனக்கு இல்லை. இன்னும் இரண்டு மாதங்களில் எனது பணி நிறைவடைகிறது. ஜூலை 25-ம் தேதி புதிய குடியரசுத் தலைவர் பொறுப்பேற்பார். என்னுடன் இதுநாள் வரை இணைந்து பணியாற்றிய அதிகாரிகளை அவர்களின் துறைகளுக்கே திருப்பி அனுப்புகிறேன்” என்று பிரணாப் தெரிவித்தார்.

#TamilSchoolmychoice