Home Featured கலையுலகம் ‘காலா’-வில் தேசிய விருதுபெற்ற தெலுங்கு நடிகை!

‘காலா’-வில் தேசிய விருதுபெற்ற தெலுங்கு நடிகை!

1100
0
SHARE
Ad

Kaalaசென்னை – தனுஷ் தயாரிப்பில் பா.இரஞ்சித் இயக்கத்தில் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடித்து வரும் புதிய திரைப்படத்தின் அதிகாரப்பூர்வ முதல்பார்வை நேற்று வியாழக்கிழமை வெளியானது.

இந்நிலையில், இத்திரைப்படத்தில் நடிக்கும் மற்ற நடிகர், நடிகைகள் குறித்த அறிவிப்பு இன்று வெள்ளிக்கிழமை வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.

இந்நிலையில் அஞ்சலி பட்டேல் என்ற தெலுங்கு நடிகை தனது டுவிட்டர் பக்கத்தில் தான் ரஜினியுடன் இணைந்து நடிக்கவிருக்கும் தகவலை வெளியிட்டிருக்கிறார்.

#TamilSchoolmychoice

தெலுங்கில் ‘நா பன்காரு டாலி’ என்ற படத்தில் நடித்து, கடந்த 2014 -ம் ஆண்டு தேசிய விருது வாங்கியவர் தான்அஞ்சலி பட்டேல் என்பது குறிப்பிடத்தக்கது.