Home Featured தொழில் நுட்பம் ‘கௌரவ டாக்டர்’ பட்டம் பெற்றார் மார்க்!

‘கௌரவ டாக்டர்’ பட்டம் பெற்றார் மார்க்!

1471
0
SHARE
Ad

Markfacebook26052017கேம்பிரிட்ஜ் – தன்னை வெளியேற்றிய ஹார்வர்டு பல்கலைக்கழகத்திடமிருந்தே கௌரவ டாக்டர் பட்டத்தைப் பெற்றிருக்கிறார் பேஸ்புக் நிறுவனர் மார்க் சக்கர்பெர்க்.

கடந்த 2004-ம் ஆண்டு, படித்துக் கொண்டிருந்த காலத்தில், மார்க் எப்போதும் பேஸ்புக் ஆராய்ச்சியிலேயே ஈடுபட்டு இருந்த காரணத்தால், ஹார்வர்டு பல்கலைக்கழகம் அவரைக் கல்லூரில் இருந்து வெளியேற்றியது.

ஆனால், 13 ஆண்டுகளுக்குப் பிறகு தற்போது அதே பல்கலைக்கழகம், தனது 366-வது பட்டமளிப்பு விழாவில், மார்க்குக்கு கௌரவ டாக்டர் பட்டம் வழங்கியிருக்கிறது.

#TamilSchoolmychoice

இதனை மகிழ்ச்சியோடு தனது பேஸ்புக் பக்கத்தில் பகிர்ந்துள்ள மார்க், கல்லூரியில் தான் தங்கியிருந்த அறைகளுக்குச் சென்று புகைப்படங்களையும் எடுத்து மகிழ்ந்திருக்கிறார்.