Home Featured நாடு ஜூன் 5 முதல் பிரிம் தொகை பட்டுவாடா!

ஜூன் 5 முதல் பிரிம் தொகை பட்டுவாடா!

892
0
SHARE
Ad

brimகோலாலம்பூர் – நடுத்தர வர்க்கத்தினருக்கு அரசாங்கம் வழங்கி வரும் ஒரே மலேசியா மக்கள் உதவித் தொகை (பிரிம்) வரும் ஜூன் 5-ம் முதல் தேதி வழங்கப்படும் என நிதியமைச்சு அறிவித்திருக்கிறது.

வரும் ஜூன் 25-ம் தேதி, ரமலான் பண்டிகை வருவதை முன்னிட்டு ஜூன் 5-ம் தேதி முதல் பிரிம் உதவித் தொகை பட்டுவாடா செய்யப்படும் என்றும் நிதியமைச்சு குறிப்பிட்டிருக்கிறது.

“பிரிம் உதவித்தொகையின் முதல் தவணையை (பிப்ரவரியில்) யாரெல்லாம் பெற்றார்களோ அவர்களுக்கு இரண்டாவது தவணை வழங்கப்படும். நிதி உதவிக்கு விண்ணப்பித்தவர்களுக்கு, ஜூன் 17-ம் தேதி பணம் பட்டுவாடா செய்யப்படும் என எதிர்பார்க்கப்படுகின்றது. ரமலான் பண்டிகைக்கு பொருட்கள் வாங்குவதற்கு இந்த பிரிம் தொகை உதவியாக இருக்கும் என்று அரசாங்கம் நம்புகின்றது” என்று நிதியமைச்சு இன்று புதன்கிழமை வெளியிட்ட அறிக்கையில் குறிப்பிட்டிருக்கிறது.

#TamilSchoolmychoice