Home Featured இந்தியா மோடியை அவமதித்தாரா பிரியங்கா சோப்ரா?

மோடியை அவமதித்தாரா பிரியங்கா சோப்ரா?

1008
0
SHARE
Ad

priyanka chopra-narendra modi=feature

புதுடில்லி – ஐரோப்பிய நாடுகளுக்கு வருகை மேற்கொண்டு ஜெர்மனி சென்றடைந்த இந்தியப் பிரதமர் நரேந்திர மோடி அங்கு ஜெர்மன் நாட்டுத் தலைவர்களைச் சந்தித்த அதே வேளையில் நேரம் ஒதுக்கி ஜெர்மனியில் இருந்த பிரபல இந்தி நடிகை பிரியங்கா சோப்ராவையும் செவ்வாய்க்கிழமை மே 30-ஆம் தேதி சந்தித்தார்.

அந்த சந்திப்பின் போது எடுக்கப்பட்ட புகைப்படம் தற்போது இந்தியா முழுவதும் பலத்த சர்ச்சைகளை உருவாக்கியிருக்கிறது.

#TamilSchoolmychoice

தனது கால்கள் தெரியும் வண்ணம் பிரியங்கா உடை உடுத்தியிருந்தது குறித்து பலர் கண்டனங்கள் தெரிவித்திருக்கும் வேளையில் பிரதமர் முன்னால் அவர் கால் மேல் கால் போட்டு அமர்ந்திருந்ததும் வேறு சில கோணங்களில் கடும் கண்டனங்களை உருவாக்கியுள்ளது.

பிரியங்கா பிரதமரை அவமதித்து விட்டார் என பலரும் சாடியுள்ளனர்.

priyanka chopra-narendra modi

அதே வேளையில், சில மகளிர் இயக்கங்களோ, இதுதான் பெண் சுதந்திரம் எனப் பாராட்டியுள்ளனர்.

இந்தியப் பெண் என்றால் இப்படித்தான் உடுத்த வேண்டும் – இப்படித்தான் அமர வேண்டும் – என காலங் காலமாக புரையோடிக் கிடந்த இந்தியக் கலாச்சார பின்னடைவுகளை உதறித் தூக்கியெறியும் வண்ணம் பிரியங்கா நடந்து கொண்டிருக்கின்றார் என பல மகளிர் அமைப்புகள் பாராட்டியுள்ளன.

இதோ புதிய இந்தியாவின் புதுமைப் பெண் எனப் பலரும் பாராட்டியிருப்பதோடு,  இதுபோன்ற உடை உடுத்தல்களுக்கு அனுமதித்த – அதைப் பெரிதுபடுத்தாத நரேந்திர மோடியின் பெருந்தன்மைக்கும் பலர் பாராட்டு தெரிவித்திருக்கின்றனர்.

ஆனால் தமிழ் நாட்டிலோ, தங்களின் உரிமைகளுக்காகப் போராடும் விவசாயிகளைச் சந்திக்க நேரம் ஒதுக்காத மோடி- தமிழ் நாட்டு எதிர்க் கட்சித் தலைவர் திமுகவின் செயல்வீரர் ஸ்டாலின் சந்திக்க நேரம் கேட்டும் ஒதுக்காத மோடி, ஜெர்மனியில் ஒரு நடிகையைச் சந்திக்க மட்டும் தாராளமாக நேரம் ஒதுக்கியுள்ளார் என்ற கண்டனங்களும் எழுந்துள்ளன.

தற்போது ஆங்கிலப் படங்களிலும் நடித்துப் புகழ் பெற்றிருக்கும் பிரியங்கா நடித்து ஆகக் கடைசியாக வெளிவந்திருக்கும் படம் ‘பே வாட்ச்’ (Bay Watch). அந்தப் படம் தற்போது உலகெங்கும் திரையிடப்பட்டிருக்கின்றது. அந்தப் படத்தை விளம்பரப்படுத்தும் நோக்கில் பிரியங்கா உலகம் எங்கும் பயணம் செய்து வருகின்றார்.

பிரியங்காவும் அம்மா மது சோப்ராவும்…

அதே வேளையில் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பிரியங்கா சோப்ரா தனது தாயுடன் பெர்லின் நகரில் உள்ள ஓர் உணவகத்தில் இணைந்து அமர்ந்திருக்கும் புகைப்படம் ஒன்றையும் வெளியிட்டிருக்கிறார்.

priyanka chopra- mother madhu chopra

“இந்த நாள் காலழைக் காட்டும் நேரம்” என்ற அர்த்தத்திலான வாசகத்தில் பிரியங்கா சோப்ரா தான் தாயுடன் இருக்கும் புகைப்படத்தை இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வெளியிட்டிருக்கிறார்.

“இப்போதுதான் தெரிகிறது. இதெல்லாம் மரபணுவில் இருக்கிறது (It is in the genes)” என ஒரு சிலர் இந்தப் புகைப்படம் குறித்து கருத்து பதிவிட்டிருக்கின்றனர்.

-செல்லியல் தொகுப்பு