Home Featured வணிகம் ஏர்ஆசியா பயணிகளை ஆச்சரியப்பட வைத்த டோனி பெர்னாண்டஸ்!

ஏர்ஆசியா பயணிகளை ஆச்சரியப்பட வைத்த டோனி பெர்னாண்டஸ்!

1225
0
SHARE
Ad

Tonyairasiaworldcabincrewdayகோலாலம்பூர் – உலக விமானப் பணியாளர் தினத்தை முன்னிட்டு, அவர்களுக்கு மரியாதை செலுத்தும் விதமாக ஏர் ஆசியா தலைமைச் செயலதிகாரி டான்ஸ்ரீ டோனி பெர்னாண்டஸ், தமது விமானம் ஒன்றில் பயணம் செய்து, பயணிகளிடமிருந்து குப்பைகளை அவரே சேகரித்திருக்கிறார்.

அக்காணொளியை தனது பேஸ்புக் பக்கத்தில் பதிவு செய்திருக்கும் டோனி பெர்னாண்டஸ், “ஹாஹாஹா.. (@audreypetriny) என்னை இரகசியமாகப் படம் பிடித்துவிட்டார். இது உலக விமானப் பணியாளர் தினம். தற்போது விமானம் நிறைந்து காணப்படுகின்றது. எனவே உதவி செய்ய விரும்புகிறேன். என்னுடைய விமானப் பணியாளர்கள் அனைவருக்கும், அவர்களின் கடின உழைப்பிற்கும் எனது நன்றிகள்” என்று டோனி தெரிவித்திருக்கிறார்.

நேற்று புதன்கிழமை இந்தோனிசியா சென்ற ஏர்ஆசியா விமானத்தில் அவர் பயணம் செய்ததாக நம்பப்படுகின்றது.