Home Featured வணிகம் கத்தார் செல்லும் விமானங்களை நிறுத்தியது எத்திஹாட்!

கத்தார் செல்லும் விமானங்களை நிறுத்தியது எத்திஹாட்!

1708
0
SHARE
Ad

Etihad Airways Airbusதுபாய் – அபு தாபிபுக்குச் சொந்தமான எத்திஹாட் ஏர்வேஸ் நிறுவனம், நாளை செவ்வாய்க்கிழமை காலை முதல் கத்தார் தலைநகர் தோஹாவிற்குச் செல்லும் அனைத்து விமானங்களையும் தற்காலிக நிறுத்தம் செய்வதாக அறிவித்திருக்கிறது.

அபு தாபியிலிருந்து தோஹாவிற்குச் செல்லவிருக்கும் கடைசி விமானம் நாளை செவ்வாய்க்கிழமை  உள்ளூர் நேரப்படி அதிகாலை 2.45 மணியளவில் புறப்படும் என்று எத்திஹாட் ஏர்வேசின் செய்தித் தொடர்பாளர் அறிவித்திருக்கிறார்.

தீவிரவாதத்திற்கு ஆதரவு தெரிவிப்பதாகக் கூறி கத்தாருடன் சவுதி அரேபியா, எதிப்து, யுஏஇ ஆகியவை தொடர்பைத் துண்டித்துக் கொண்டதையடுத்து, அபு தாபியும் இந்த முடிவை எடுத்திருக்கிறது.

#TamilSchoolmychoice