Home Featured கலையுலகம் டுவிட்டர் பதிவுகள்: புதிய தோற்றத்தில் மிரட்டும் பியா!

டுவிட்டர் பதிவுகள்: புதிய தோற்றத்தில் மிரட்டும் பியா!

978
0
SHARE
Ad

Piyabajpaiசென்னை – ‘கோவா’, ‘கோ’ உள்ளிட்ட படங்களில் நடித்து தமிழ்த் திரைப்பட ரசிகர்களின் மனதில் இடம்பிடித்தவர் பியா பாஜ்பாய்.

2014-ம் ஆண்டு ‘நெருங்கி வா முத்தமிடாதே’ என்ற திரைப்படத்தில் நடித்ததோடு, கடந்த இரண்டு ஆண்டுகளுக்கும் மேலாக தமிழ்த் திரைப்படங்களில் தலை காட்டாமல் இருந்து வருகின்றார்.

Piyabajpai1ஆனால் இந்த இடைவெளியில் பாலிவுட்டில் 3 திரைப்படங்களில் நடித்துவிட்டார் பியா.

#TamilSchoolmychoice

இதனிடையே, உடற்பயிற்சியில் மிகவும் ஈடுபாடு கொண்ட பியா, உடல் கொழுப்பை பெருமளவில் குறைத்து, பார்ப்பதற்கு விளையாட்டு வீராங்கணை போன்ற தோற்றத்தில் புகைப்படம் எடுத்து, அண்மையில் அதனைத் தனது டுவிட்டரில் வெளியிட்டு ரசிகர்களை ஆச்சரியப்படுத்தியிருக்கிறார்.

Piyabajpai2அப்புகைப்படங்களைப் பார்த்த சிலர், பியா தொலைக்காட்சி ஒன்றில் சாகச நிகழ்ச்சி  நடத்தப் போவதாக கொளுத்திப் போட, அதனை உடனடியாக மறுத்த பியா, “எங்கிருந்து இந்தச் செய்திகளெல்லாம் வெளியாகிறது என்று தெரியவில்லை. நான் எந்த ஒரு தொலைக்காட்சியிலும் நிகழ்ச்சி செய்யவில்லை” என்று எரிச்சலோடு தெரிவித்திருக்கிறார்.