Home Featured உலகம் நேபாளத்தின் புதிய பிரதமராக ஷேர் பகதூர் தியூபா தேர்வு!

நேபாளத்தின் புதிய பிரதமராக ஷேர் பகதூர் தியூபா தேர்வு!

881
0
SHARE
Ad

NepalPMSher-Bahadurகாத்மாண்டு – நேபாள நாட்டின் 40-வது பிரதமராக ஷேர் பகதூர் தியூபா தேர்வு செய்யப்பட்டிருக்கிறார்.

நேபாளத்தில் கடந்த 10 ஆண்டுகளில் இதுவரை 10 முறை தலைமைத்துவத்தில் மாற்றம் ஏற்பட்டிருக்கிறது.

ஆளும் கட்சியான நேபாள கம்யூனிஸ்ட் கட்சி (ஒருங்கிணைந்த மார்க்சிஸ்ட் லெனினிஸ்ட்) மற்றும் நேபாள காங்கிரஸ் கட்சிகளிடையே கடந்த ஆகஸ்ட் மாதம் அதிகாரத்தை பகிர்ந்து கொள்வது என்று ஒப்பந்தம் செய்யப்பட்டது.

#TamilSchoolmychoice

அதன்படி, பிப்ரவரி 2018-ம் ஆண்டு நாடாளுமன்றத் தேர்தல் முறைப்படி நடைபெறும் வரை இரு கட்சிகளிடையே மாறி மாறி பிரதமர் பதவி வகிப்பது என்று முடிவு செய்யப்பட்டது.

இந்நிலையில், ஏற்கனவே கூறியபடி நேபாள பிரதமர் பிரசண்டா தனது பதவியை கடந்த சில தினங்களுக்கு முன்பு  ராஜினாமா செய்தார். இதையடுத்து நேபாள காங்கிரஸ் கட்சி தலைவர் ஷேர் பகதூர் தியூபா புதிய பிரதமராகப் பதவியேற்றார்.

அவருக்கு இந்தியப் பிரதமர் நரேந்திர மோடி தனது வாழ்த்துகளைத் தெரிவித்திருக்கிறார்.