Home Featured நாடு மேலும் 2 வழக்கறிஞர்களுக்கு நஜிப் பணம் தந்தார்!

மேலும் 2 வழக்கறிஞர்களுக்கு நஜிப் பணம் தந்தார்!

954
0
SHARE
Ad

Rafizi Ramli-parlimen

கோலாலம்பூர் – சிறையிலிருக்கும் பிகேஆர் தலைவர் டத்தோஸ்ரீ அன்வார் இப்ராகிமின் இரண்டாவது ஓரினப் புணர்ச்சி வழக்கில் சம்பந்தப்பட்ட மேலும் இரண்டு வழக்கறிஞர்களுக்கு பிரதமர் நஜிப் துன் ரசாக் பணம் தந்தார் எனவும் இந்தப் பணம் 1எம்டிபி தொடர்புடைய எஸ்ஆர்சி இண்டர்நேஷனல் நிறுவனத்திலிருந்து செலுத்தப்பட்டது என்றும் பிகேஆர் கட்சியின் உதவித் தலைவர்களில் ஒருவரான ரபிசி ரம்லி குற்றம் சாட்டியிருக்கிறார்.

ஊழல் தடுப்பு ஆணையத்தின் விசாரணை அறிக்கைகளிலிருந்து கசிந்ததாகக் கருதப்படும் ஆவணங்களின் படி 325,188 ரிங்கிட் கசாலி இஷாக் என்ற வழக்கறிஞருக்கு 2011-இல் வழங்கப்பட்டது.

#TamilSchoolmychoice

மற்றொரு வழக்கறிஞரான சாலேஹூடின் சைடின் என்பவரின் வழக்கறிஞர் நிறுவனத்திற்கும் நஜிப் எஸ்ஆர்சி இண்டர்நேஷனல் மூலம் பணம் வழங்கப்பட்டதாகவும் ரபிசி கூறியிருக்கின்றார்.

பணம் பெற்ற வழக்கறிஞர்களை மலேசியாகினி இணையத் தளம் தொடர்பு கொண்ட போது அவர்கள் பணம் பெற்றதை ஒப்புக் கொண்டனர். ஆனால் அந்தப் பணம் எங்கிருந்தது வந்தது என்பது தங்களுக்குத் தெரியாது என அவர்கள் கூறியிருக்கின்றனர்.

ரபிசியும் தனது நோக்கம் வழக்கறிஞர்களைக் குற்றம் சாட்டுவதல்ல என்றும் அவர்கள் தங்களின் தொழில் நிமித்தமான கடமையைத்தான் செய்தார்கள் என்றும் மற்றபடி அவர்களுக்கு வழங்ககப்பட்ட பணத்தின் மூலம் என்ன என்பது அவர்களுக்குத் தெரிந்திருக்க வாய்ப்பில்லை என்றும் தெரிவித்திருக்கின்றார்.

ஏற்கனவே, அன்வார் இப்ராகிம் வழக்கை அரசாங்கத்தின் சார்பில் முன்னின்று நடத்திய ஷாபி அப்துல்லாவுக்கு 9.5 மில்லியன் ரிங்கிட் நஜிப் மூலம் வழங்கப்பட்ட விவகாரமும் காவல் துறை புகார்வரை விஸ்வரூபம் எடுத்திருக்கிறது.