Home Featured நாடு அஸ்மின் அலிக்கு கோரிக்கை மனு அளிக்கும் போராட்டம் ஒத்திவைப்பு!

அஸ்மின் அலிக்கு கோரிக்கை மனு அளிக்கும் போராட்டம் ஒத்திவைப்பு!

848
0
SHARE
Ad

seafield-mariamman temple-ஷா ஆலாம் – நாளை புதன்கிழமை (7 ஜூன் 2017) சிலாங்கூர் மாநில அரசாங்கத்தின் தலைமைச் செயலகத்தின் முன் கூடி, மந்திரி பெசார் அஸ்மின் அலியிடம், சீபீல்ட் மாரியம்மன் ஆலயத்தை அதே இடத்தில் நிலைநிறுத்தும் கோரிக்கை மனு அளிக்கும் போராட்டம் தற்காலிகமாக ஒத்தி வைக்கப்பட்டிருப்பதாக அறிவிக்கப்பட்டிருக்கின்றது.

இந்த விவகாரத்தில் இந்திய சமுதாயத்தில் எழுந்திருக்கும் கடுமையான எதிர்ப்புகள், கொந்தளிப்புகள் காரணமாக, ஆலயத்தை அகற்றும் நடவடிக்கை தற்காலிகமாக நிறுத்தி வைக்கப்பட்டிருப்பதாக மந்திரி பெசார் அஸ்மின் அலி அறிவித்திருப்பதைத் தொடர்ந்து இந்த முடிவு எடுக்கப்பட்டிருக்கின்றது.

சீபீல்ட் ஆலயத்தை அகற்றும் நடவடிக்கை ஒத்தி வைக்கப்பட்டிருப்பது, இந்தப் போராட்டத்தை மேற்கொண்டிருக்கும் இந்திய சமுதாயத்திற்குக் கிடைத்திருக்கும் மகத்தான வெற்றியாகப் பார்க்கப்படுகின்றது.

#TamilSchoolmychoice

மேலும் சிலாங்கூர் மாநில அரசாங்கம் சார்பில் மந்திரி பெசார் அஸ்மின் அலியே சம்பந்தப்பட்ட தரப்புகளை பேச்சு வார்த்தைகளுக்கு அழைத்திருப்பதும் ஆலயத்தைப் பாதுகாக்கும் போராட்டத்திற்குக் கிடைத்திருக்கும் ஒரு திருப்புமுனை வெற்றியாகப் பார்க்கப்படுகிறது.