Home Featured தமிழ் நாடு தினகரன் ஆதரவு சட்டமன்ற உறுப்பினர்கள் 27-ஆக உயர்வு

தினகரன் ஆதரவு சட்டமன்ற உறுப்பினர்கள் 27-ஆக உயர்வு

770
0
SHARE
Ad

ttv dinakaran-29042017சென்னை – தமிழக அரசியல் களத்தில் திடீர் திருப்பமாக இதுவரையில் 27 சட்டமன்ற உறுப்பினர்கள் அதிமுக துணைப் பொதுச் செயலாளர் டிடிவி.தினகரனைச் சந்தித்துத் தங்களின் ஆதரவைத் தெரிவித்திருக்கின்றனர்.

ஏற்கனவே 12 சட்டமன்ற உறுப்பினர்கள் ஓ.பன்னீர் செல்வம் அணியில் இணைந்திருப்பதால், தற்போது எடப்பாடி பழனிசாமி தலைமையிலான அதிமுக அணியில் 95 சட்டமன்ற உறுப்பினர்கள் மட்டுமே இருக்கின்றனர்.

இந்நிலையில் அதிமுக ஆட்சி கவிழுமா அல்லது ஒவ்வொரு அணியும் தங்களின் பலத்தை நிலை நிறுத்துவதற்காக எடுத்து வரும் நடவடிக்கையா என்பது குறித்து பல்வேறு விவாதங்கள் தமிழகத்தில் எழுந்துள்ளன.

#TamilSchoolmychoice