கோலாலம்பூர் – புதிய டிஜிட்டல் (எண்ணியல்) ஒளிபரப்புச் சேவையை இன்று புதன்கிழமை அறிமுகம் செய்த பிரதமர் டத்தோஸ்ரீ நஜிப் துன் ரசாக், ஒரே மலேசியா உதவித்தொகை பெறும் 4.2 மில்லியன் பேருக்கு, 199 ரிங்கிட் மதிப்புள்ள தொலைக்காட்சி செட் -டாப் பாக்ஸ் இலவசமாக வழங்கப்படும் என்று அறிவித்தார்.
ஆசியாவிலேயே, மக்களுக்கு இலவச டீகோடர் வழங்கும் ஒரே நாடு மலேசியா தான் என்றும் நஜிப் தெரிவித்தார்.
மேலும் அவர் கூறுகையில், “2.2 மில்லியன் இலவச டீகோடர்களை வழங்க அரசாங்கம் ஒப்புக் கொண்டது. அதேவேளையில் எஞ்சிய 2 மில்லியன் டீகோடர்களை மைடிவி பிராட்கேஸ்டிங் செண்ட்ரியான் பெர்ஹாட் (மைஃபிரீவியூ ஆபரேடர்) வழங்குகிறது. எனவே மொத்தம் 4.2 மில்லியன் இலவச டீகோடர்கள் பிரிம் உதவித் தொகை பெறுபவர்களுக்குச் செல்லும்” என்று நஜிப் தெரிவித்தார்.