Home Featured கலையுலகம் புதைகுழி, ராட்சத உடும்பு: ஏமாற்றிய தொகுப்பாளரை அடித்த ஷாருக்கான் (காணொளி)

புதைகுழி, ராட்சத உடும்பு: ஏமாற்றிய தொகுப்பாளரை அடித்த ஷாருக்கான் (காணொளி)

1107
0
SHARE
Ad

shahrukkhanprank1துபாய் – அராப் தொலைக்காட்சியின் நிகழ்ச்சி ஒன்றில் கலந்து கொண்ட பாலிவுட் நடிகர் ஷாருக்கானை, அந்நிறுவனம் புதைகுழி, ராட்சத உடும்பு ஆகியவற்றை வைத்து வேடிக்கை செய்து பயங்கரமாக ஏமாற்றியிருக்கிறது.

அக்காணொளி தற்போது நட்பு ஊடகங்களில் பலராலும் பகிரப்பட்டு வருகின்றது.

தொலைக்காட்சி நிகழ்ச்சியில் கலந்து கொண்ட பின்னர், அந்நிறுவனம் ஏற்பாடு செய்திருந்த வாகனம் ஒன்றில் அங்கிருந்து புறப்படுகிறார் ஷாருக்கான்.

#TamilSchoolmychoice

அவருடன் பெண் நிகழ்ச்சித் தொகுப்பாளரும், இரண்டு பாதுகாவலர்களும் இருக்கின்றனர். பாலைவனத்தில் அக்கார் சென்று கொண்டிருக்கும் போது கட்டுப்பாட்டை இழந்து வேகமாகச் சென்று ஒரு இடத்தில் நிற்கிறது.

திடீரென அந்த இடம் அப்படியே மண்ணில் புதையத் தொடங்குகிறது. கார் கொஞ்சம் கொஞ்சமாக மண்ணுக்குள் செல்ல, ஷாருக்கானும், அவர் உடனிருந்த பெண்ணும், பாதுகாவலர்களும் காரின் மேல் ஏறி நின்று தப்பிக்க நினைக்கிறார்கள்.

திடீரென அந்த இரண்டு பாதுகாவலர்களும் மண்ணுக்குள் மூழ்கிவிட, செய்வதறியாது நிற்கும் ஷாருக்கான், அப்பெண்ணை கையில் பிடித்துக் கொண்டு நிற்கிறார். அப்பெண்ணோ பயத்தில் அலறுகிறார். ஆனால் ஷாருக்கான் அப்பெண்ணை சமாதானப்படுத்தி ஆறுதல் சொல்கிறார்.

இது நடந்து கொண்டிருக்கும் போது, ஒரு ராட்சத உடும்பு ஒன்று அவர்களை நோக்கி வருகின்றது. ஷாருக்கான் ஒரு நிமிடம் என்ன செய்வதென்று தெரியாமல், மண்ணை அள்ளி அந்த உடும்பின் மீது வீசுகிறார்.

திடீரென அந்த உடும்புக்குள் இருந்து வெளியே வரும் மனிதர், “ஹாய் ஷாருக்கான்” என்கிறார்.

பிறகு தான் இது அனைத்தும் அராப் தொலைக்காட்சியின் ஏமாற்று வேலை என்றும், வேடிக்கை நிகழ்ச்சி என்பதும் ஷாருக்கானுக்குத் தெரியவருகின்றது.

கோபத்தின் உச்சிக்குச் செல்லும் ஷாருக்கான், உடும்பு போல் வேடமிட்ட அந்த நிகழ்ச்சித் தொகுப்பாளரை அடிக்கத் தாவுகிறார். “ஷாருக்கான் ஐ லவ் யூ” என்று பல முறை தனது செயலுக்கு அந்த நிகழ்ச்சித் தொகுப்பாளர் மன்னிப்புக் கேட்டாலும் கூட, ஷாருக்கானின் கோபம் அடங்கவில்லை.

“என் பின்னாலே வந்த என்ன செய்வேன் என்று எனக்கே தெரியாது. கண் முன்னாலே வராதே” என்று கண்டித்துவிட்டு, ஷாருக்கான் அங்கிருந்து நடந்து சென்று காரில் ஏறுகிறார்.

என்றாலும், அந்த நிகழ்ச்சித் தொகுப்பாளர் விடுவதாய் இல்லை. காரின் அருகில் சென்று ஷாருக்கானிடம் பலமுறை மன்னிப்புக் கேட்பதாய் முடிகிறது அக்காணொளி.

அக்காணொளியை இங்கே காணலாம்:-

https://www.youtube.com/watch?v=lr3Cm77tWys