Home Featured கலையுலகம் எஸ்.டி.பாலாவின் ‘ஆர்.ஐ.பி?’ : ஆத்மாவின் ஆதங்கம்! அறிந்து கொள்ள வேண்டிய பாடம்!

எஸ்.டி.பாலாவின் ‘ஆர்.ஐ.பி?’ : ஆத்மாவின் ஆதங்கம்! அறிந்து கொள்ள வேண்டிய பாடம்!

994
0
SHARE
Ad

RIPmovieகோலாலம்பூர் – மலேசிய இயக்குநர்களில் வித்தியாசமான கதையம்சங்களுடன், நிஜ வாழ்க்கையில் நடக்கும் சம்பவங்களின் அடிப்படையில் தனது திரைப்படங்களை இயக்கி வருபவர் இயக்குநர் எஸ்.டி.பாலா.

இயக்குநர் சிகரம் கே.பாலச்சந்தரின் சீடரான இவரது சமீபத்திய படைப்பு, பினோமினா சினி புரொடக்சி தயாரிப்பில், ‘ஆர்.ஐ.பி ?’ – ஆத்மாவின் ஆதங்கம். இன்று ஜூன் 8-ம் தேதி முதல் 8 மாநிலங்களில், 25 திரையரங்குகளில் இத்திரைப்படம் வெளியாகிறது.

இன்றைய பரபரப்பான அவசர உலகத்தில், எதை நோக்கியோ ஓடிக் கொண்டிருக்கும் நாம், நமக்கென்றும், நம்மையே நம்பியிருக்கும் குடும்பத்திற்கென்றும் செய்ய வேண்டிய கடமைகளை பெரும்பாலும் மறந்துவிடுகிறோம்.

#TamilSchoolmychoice

அவ்வாறு மறந்துவிட்ட ஒரு மனிதரின் ஆன்மா, எப்படியெல்லாம் தனது ஆதங்கத்தை வெளிப்படுத்துகிறது? இறந்துவிட்ட அம்மனிதரின் குடும்பத்தினருக்கும், உற்றார் உறவினருக்கும் எப்படிப்பட்ட பாதிப்புகள் நேர்கின்றன? என்பதை இறுதிச்சடங்குகள் நடக்கும் ஒரு வீட்டில் நடைபெறும் சம்பவங்களின் தொகுப்பாகக் காட்டியிருக்கிறார் இயக்குநர் எஸ்.டி.பாலா.

RIPmovie1

(ஆர்.ஐ.பி? திரைப்படத்தில் பணியாற்றிய கலைஞர்களுடன் இயக்குநர் எஸ்.டி.பாலா)

உடல்நலம், உடற்பயிற்சி, உடல் உறுப்புகள் தானம், இருதய அறுவை சிகிச்சை, சொத்து விவகாரங்கள், காப்புறுதி என ஒரு மனிதன் தான் வாழும் காலத்திலேயே செய்ய வேண்டிய அத்தனை கடமைகளையும், அதைச் செய்யத் தவறும் போது ஏற்படும் விளைவுகளையும் ஒரே படத்தில், காட்சியமைப்புகளின் மூலம் காட்டியிருக்கிறார் எஸ்.டி.பாலா.

RIPmovie2

(இன்று ஜூன் 8 முதல் ஆர்.ஐ.பி? திரைப்படம் வெளியாகவிருக்கும் திரையரங்குகளின் பட்டியல்)

படம் பார்த்துவிட்டு வெளியே வரும் போது, நிச்சயமாக மேற்சொன்ன கடமைகளில் செய்யாமல் விடுபட்ட ஒன்றைத் தேடி அதை உடனே செய்யும் வகையில், விழிப்புணர்வை ஏற்படுத்தும் இத்திரைப்படம் ஒரு பாடமாகவே அமைந்திருக்கிறது.

எனவே, இளைஞர்களும், நடுத்தர வயதில் இருப்பவர்களும், அவசியம் திரையரங்குகளில் சென்று இத்திரைப்படத்தைப் பார்த்து விழிப்புணர்வை அடைய வேண்டும்.

– ஃபீனிக்ஸ்தாசன்