Home Featured உலகம் பிலிப்பைன்ஸ் பள்ளியில் தீவிரவாதிகள் அட்டூழியம்: மாணவர்கள் சிறைப்பிடிப்பு!

பிலிப்பைன்ஸ் பள்ளியில் தீவிரவாதிகள் அட்டூழியம்: மாணவர்கள் சிறைப்பிடிப்பு!

870
0
SHARE
Ad

மணிலா – தெற்கு பிலிப்பைன்சில், இன்று புதன்கிழமை, பள்ளி ஒன்றில் புகுந்த ஐஎஸ் ஆதரவுத் தீவிரவாதிகள், அங்கிருக்கும் மாணவர்கள் பலரை பிணை பிடித்து வைத்திருப்பதாக காவல்துறை அறிவித்திருக்கிறது.

மிண்டானோ தீவில், உள்ள பிக்சாவாயான் என்ற இடத்திலுள்ள பள்ளியில், பங்சாமோரோ இஸ்லாம் விடுதலைப் போராட்டவாதிகள் (BIFF) படையைச் சேர்ந்த சுமார் 300 ஆயுதமேந்திய தீவிரவாதிகள் பள்ளிக்குள் நுழைந்திருப்பதாகவும் காவல்துறை தெரிவித்திருக்கிறது.

#TamilSchoolmychoice

கடந்த 5 வாரங்களாக மிண்டானோ தீவில், பிலிப்பைன்ஸ் படையினருக்கும், ஐஎஸ் ஆதரவு தீவிரவாதிகளுக்கும் சண்டை நடந்து வருவது குறிப்பிடத்தக்கது.