கொலம்பியா – கொலம்பியா ஏர்லைன்சைச் சேர்ந்த ஏரோசக்ரே என்ற சரக்கு விமானம் போயெர்ட்டோ கரேனோ என்ற இடத்தில் விழுந்து நொறுங்கியதில் 4 பேர் உயிரிழந்ததாகவும், ஒருவர் படுகாயம் அடைந்திருப்பதாகவும் தகவல்கள் கூறுகின்றன.
ஜெர்மன் ஒலேனோ விமான நிலையத்தில் இருந்து புறப்பட்ட அவ்விமானம், சிறிது நேரத்திலேயே வெனிசுலா எல்லை அருகே விழுந்து நொறுங்கியதாக அந்நாட்டு ஊடகங்கள் கூறுகின்றன.
அவ்விமானம் நொறுங்குவதற்கு முன்பு தனது கட்டுப்பாட்டை இழந்து ஓடும் காட்சி தற்போது நட்பு ஊடகங்களில் பரவி வருகின்றது.
https://www.youtube.com/watch?v=YTwk9sRnHa0
Comments