Home Featured நாடு பினாங்கில் 2030 வரை தடையில்லா நீர் விநியோகம் – லிம் உறுதி!

பினாங்கில் 2030 வரை தடையில்லா நீர் விநியோகம் – லிம் உறுதி!

568
0
SHARE
Ad

articles27062013_Lim_Guan_Eng2_600_454_100கோலாலம்பூர் – வரும் 2030-ம் ஆண்டு வரையில் பினாங்கில் நீர் விநியோகத்தில் தடையோ, பங்கீடோ ஏற்படாது என்றும், அதுவரை பினாங்கு வாழ் மக்கள் நீரைத் தொடர்ந்து பயன்படுத்தி பயனடையலாம் என்றும் அம்மாநில முதல்வர் லிம் குவான் எங் தெரிவித்துள்ளார்.

“மலேசிய வரலாற்றிலேயே நீர் பங்கீட்டைத் திணிக்காத ஒரே மாநிலம் நாமாகத் தான் இருப்போம்” என்று நேற்று புதன்கிழமை வெளியிட்ட அறிக்கையில் லிம் தெரிவித்துள்ளார்.

பினாங்கில் நீர் பற்றாக்குறை ஏற்படாததற்கு முக்கியக் காரணம் தமது நிர்வாகத்தின் மூன்று அம்ச வியூகங்கள் தான் என்றும் லிம் குறிப்பிட்டுள்ளார்.

#TamilSchoolmychoice

முதலாவதாக, பினாங்கில் நீர் பங்கீடு வழங்கும் நிலை ஏற்பட்டால் அதற்கான மொத்த பொறுப்பும் தலைமை நிர்வாகம் ஏற்கும் நிலையை உருவாக்கியிருக்கிறோம். கிட்டத்தட்ட ‘தலை உருளும்’ நிலை தான்.

இரண்டாவது, நீரை வீணாக்குபவர்களுக்கு விலையில் தண்டனை விகிதம் நிர்ணயிக்கப்பட்டுள்ளது. அதோடு நீர் பாதுகாப்புத் திட்டங்களும் நிர்ணயம் செய்யப்பட்டுள்ளன.

மூன்றாவதாக, நீர் பிடிப்புப் பகுதிகள் அனைத்தும் முழுமையாக அரசிதழில் பதிவு செய்யப்பட்டுள்ளதோடு, அங்கு நீர் சுத்திகரிப்பு ஆலைகளும், நீர் தேக்கங்களும் வடிவமைக்கப்பட்டுள்ளன. அவை 32% நீர் இருப்பு வரம்பிற்குட்பட்டு, பினாங்கு மக்களுக்கு நீர் விநியோகம் செய்கின்றன.

இந்த மூன்று முக்கியக் காரணிகளால் தான் 1.6 மில்லியன் பினாங்கு வாழ் மக்களுக்கு, 2030 வரை தடையில்லா நீர் விநியோகம் வழங்கப்படும் என பினாங்கு மாநில அரசால் உறுதியாகச் சொல்லமுடிகின்றது என்று லிம் தெரிவித்துள்ளார்.