Home Featured தமிழ் நாடு கருணாநிதி இல்லம் திரும்புகிறார்!

கருணாநிதி இல்லம் திரும்புகிறார்!

765
0
SHARE
Ad

karu

சென்னை – கடந்த சில நாட்களாக சென்னை காவேரி மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த திமுக தலைவர் கலைஞர் மு.கருணாநிதி இன்று சனிக்கிழமை இல்லம் திரும்பலாம் என மருத்துவர்கள் கூறியுள்ளதாக அவரது மகள் கனிமொழி தெரிவித்துள்ளார்.

இதனைத் தொடர்ந்து கருணாநிதி இன்றே இல்லம் திரும்புவார் என எதிர்பார்க்கப்படுகின்றது. இருப்பினும் அவர் ஓய்வில் இருப்பார் என்றும் பொது நிகழ்ச்சிகளில் கலந்து கொள்ளமாட்டார் என்றும் எதிர்பார்க்கப்படுகின்றது.

#TamilSchoolmychoice

ஏற்கனவே அறிவிக்கப்பட்டு, ஒத்தி வைக்கப்பட்ட திமுக பொதுக் குழுக் கூட்டம் எப்போது நடைபெறும் என்ற அறிவிப்பும் இதுவரை வெளியிடப்படவில்லை.