Home Featured நாடு கொள்ளையர்கள் தாக்குதலில் டத்தோவும், அவரது மனைவியும் படுகாயம்!

கொள்ளையர்கள் தாக்குதலில் டத்தோவும், அவரது மனைவியும் படுகாயம்!

684
0
SHARE
Ad

datoஈப்போ – தாமான் மேரு ஹைட்ஸ் என்ற இடத்தில் அமைந்திருக்கும் டத்தோ மன்சோர் அகமட் (வயது 67) என்பவரின் வீட்டில் ஆயுதங்களுடன் புகுந்த 6 கொள்ளையர்கள் அவர்களைத் தாக்கி நகை, பணத்தைக் கொள்ளையடிக்க முயற்சி செய்துள்ளனர்.

மாஜுபேராக் ஹோல்டிங்க்ஸ் பெர்ஹாட் என்ற நிறுவனத்தின் முன்னாள் தலைமைச் செயலதிகாரியான டத்தோ மன்சோர் அகமட், இச்சம்பவத்தின் போது கொள்ளையர்கள் நடத்திய தாக்குதலில் தலையில் பலத்த வெட்டுக் காயங்களுக்கு உள்ளானார்.

நேற்று வியாழக்கிழமை, பிற்பகல் 3.30 மணியளவில் நடந்த இக்கொள்ளை முயற்சியின் போது, கொள்ளையர்களிடமிருந்து தனது 3 வயது பேரக் குழந்தையைப் பாதுகாக்க முயன்ற மன்சோர் அகமட்டின் மனைவிக்கும் கையில் வெட்டுக் காயம் ஏற்பட்டது.

#TamilSchoolmychoice

எனினும், வீட்டிலிருந்தவர்கள் கூச்சலிட்டதால், கொள்ளையர்கள் அவர்களின் கார் மற்றும் வீட்டுச் சாவிகளுடன் அங்கிருந்து தப்பியோடிவிட்டதாக மன்சோரின் மகன் ரைமி மன்சோர் தெரிவித்துள்ளார்.

இக்கொள்ளைச் சம்பவத்தைக் கண்ட அண்டை வீட்டார் உடனடியாகக் காவல்துறைக்குத் தகவல் அளித்துள்ளனர்.

இதனை ஈப்போ துணை ஓசிபிடி கண்காணிப்பாளர் அப்துல் ரானி ஆலியாசும் உறுதிப்படுத்தியுள்ளார்.

“எனினும், இச்சம்பவத்தின் நேரில் கண்டவர்கள் எவரும் கொள்ளையர்களை அடையாளம் காட்ட இயலவில்லை” என்றும் அப்துல் ரானி ஆலியாஸ் தெரிவித்துள்ளார்.