Home Featured நாடு துணைப் பிரதமரின் இளைய சகோதரர் காலமானார்!

துணைப் பிரதமரின் இளைய சகோதரர் காலமானார்!

516
0
SHARE
Ad

zahidhamidicitizen1606கோலாலம்பூர் – துணைப் பிரதமர் டத்தோஸ்ரீ அகமட் சாஹிட் ஹாமிடியின் இளைய சகோதரர் அகமட் சுல்பிக்ரி ஹாமிடி நேற்று வியாழக்கிழமை இரவு 11.30 மணியளவில் கோலாலம்பூரில் உள்ள ஒரு மருத்துவமனையில் காலமானார் என பெர்னாமா செய்திக் குறிப்பு தெரிவித்துள்ளது.

45 வயதான அவரது மரணத்திற்கான காரணம் வெளியிடப்படவில்லை.

அகமட் சுல்பிக்ரியின் நல்லுடல் இன்று வெள்ளிக்கிழமை மதியத் தொழுகைக்குப் பின்னர் பாகான் டத்தோவிலுள்ள சுங்கை நிப்பா டாராட் முஸ்லீம் மயானத்தில் நல்லடக்கம் செய்யப்படும்.