தஞ்சோங் மாலிம் – நேற்று வியாழக்கிழமை மாலை (6 ஜூலை 2017), தஞ்சோங் மாலிமிலுள்ள உப்சி பல்கலைக்கழகத்தில் நான்காவது ஆண்டாக நடைபெறும் மலேசிய இந்தியர் விளையாட்டுப் போட்டிகளை (சுக்கிம்) துணைப் பிரதமர் டத்தோஸ்ரீ சாஹிட் ஹமிடி சார்பில் பேராக் மாநில மந்திரி பெசார் டத்தோஸ்ரீ டிராஜா டாக்டர் சாம்ரி அப்துல் காதிர் அதிகாரப்பூர்வமாகத் தொடக்கி வைத்தார்.
இந்த நிகழ்ச்சியில் மஇகா தேசியத் தலைவர் டத்தோஸ்ரீ டாக்டர் ச.சுப்ரமணியம் உள்ளிட்ட மஇகா தலைவர்கள் பலரும் கலந்து கொண்டனர்.
இம்மாதம் 3ஆம் தேதி முதல் 9ஆம் தேதி வரை நடைபெறவிருக்கும் இந்த விளையாட்டுப் போட்டியில் நாடு முழுவதிலுமிருந்து 12 மாநிலங்களைப் பிரதிநிதித்து 1,800 விளையாட்டாளர்களும், 500 அதிகாரிகளும் கலந்து கொண்டுள்ளனர். இவர்கள் 11 விதமான போட்டிகளில் தங்களது திறனை வெளிப்படுத்தவிருக்கின்றனர்.