Home கலை உலகம் பழனிசாமியைச் சந்தித்து நன்றி சொன்ன விஷால்!

பழனிசாமியைச் சந்தித்து நன்றி சொன்ன விஷால்!

973
0
SHARE
Ad

vishal_14717mசென்னை – கடந்த 2009 முதல் 2014-ம் ஆண்டு வரையிலான திரைப்படங்களுக்கு விருதுகள் அறிவித்த மாநில அரசுக்கு நன்றி செலுத்தும் விதமாக நேற்று வெள்ளிக்கிழமை தமிழ்நாடு திரைப்படத் தயாரிப்பாளர் சங்கத் தலைவர் விஷால், தமிழக முதல்வர் எடப்பாடி பழனிச்சாமியைச் சந்தித்தார்.

விஷாலுடன் தமிழ்நாடு திரைப்பட இயக்குநர்கள் சங்கத் தலைவர் விக்ரமன், தென்னிந்திய திரைப்பட வர்த்தக சபை தலைவர் எல்.சுரேஷ், தமிழ்நாடு திரைப்பட நடிகர் சங்க உறுப்பினர் ஐசரி கணேசன் உள்ளிட்ட சங்க நிர்வாகிகளும் பழனிச்சாமியைச் சந்தித்தனர்.

திரைப்படங்களுக்கு விருதுகளோடு, அரசு மானியமும் அறிவித்ததற்கு பூங்கொத்து கொடுத்து அவர்கள் நன்றி தெரிவித்தனர்.