Home Featured நாடு “மாணவர்கள் தொழில்நுட்பத்தைக் கொண்டு திறன்களை மேம்படுத்த வேண்டும்”

“மாணவர்கள் தொழில்நுட்பத்தைக் கொண்டு திறன்களை மேம்படுத்த வேண்டும்”

1392
0
SHARE
Ad

titian-digital-selangor-contest-22072017 (2)கோலக்கிள்ளான் இந்து இளைஞர் இயக்கம் கடந்த 33 ஆண்டுகளாக சமுதாய நலன் கருதி பயன்மிக்கத் திட்டங்களை செயல்படுத்தி வருகின்றது. இவ்வியக்கத் திட்டங்களில் ஒன்றானது தித்தியான் டிஜிட்டல் திட்டமாகும்.

இத்திட்டமானது கடந்த 2009ஆம் ஆண்டு தொடங்கப்பட்டது. 9 வருடங்களாக செயல்படுத்தப்பட்டு வரும் இத்திட்டம், தமிழ்ப்பள்ளி மாணவர்கள் உலகமய மாறுதலுக்கேற்ப தகவல் தொடர்புத் திறனறிவை (ICT) பெற்றிருப்பதை உறுதிப்படுத்தும் பொருட்டு சீரிய முறையில் செயல்வடிவம் காணப்பெற்று வருகின்றது.

titian-digital-selangor-contest-22072017 (1)புறநகர், நகர்புற மாணவர்களிடையே அமையப்பெற்ற தகவல் தொடர்புத் திறனறிவை (ICT இடைவெளியை குறைக்க இத்திட்டம் பெரும் பங்காற்றி வருகின்றது. தித்தியான் டிஜிட்டல் திட்டம் அமைக்கப்பட்டதன் வழி மாணவர்கள், ஆசிரியர்கள், பெற்றோர்கள், சுற்று வட்டார பொது மக்கள் என அனைவரும் பயன்பெறும் வகையில் இருக்கிறது

#TamilSchoolmychoice

தமிழ்ப்பள்ளி மாணவர்களை ஊக்குவிக்கும் வகையில் தேசிய அளவிலான தகவல் தொடர்பு தொழில் நுட்ப போட்டிகள் இத்திட்டத்தின் கீழ் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. கோலக்கிள்ளான் இந்து இளைஞர் இயக்கம் (HYO Port Klang), மலேசிய சமுக  கல்வி அறவாரியமும் (MCEF), மலேசிய உத்தமம் அமைப்பும் (INFITT Malaysia) இணைந்து இப்போட்டியை வழிநடத்துகிறது. இதில் 5 போட்டிகள் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளன, அதில் தகவல் தொடர்புத் தொழில்நுட்ப புதிர்ப்போட்டி மட்டுமே மாநில அளவில் நடைபெற்று வருகிறது.

titian-digital-selangor-contest-22072017 (3)கோலாலம்பூர் & சிலாங்கூர் மாநில அளவிலான தகவல் தொடர்பு தொழில்நுட்ப புதிர்ப் போட்டி, கடந்த 22-07-2017 (சனிக்கிழமை) அஹ்மாட் ராஜாலி, காப்பார்  பொது மண்டபத்தில் நடைபெற்றது, இதில் சிறப்புப் பிரமுகராக ஸ்ரீ அண்டலாஸ் சட்டமன்ற உறுப்பினர் சேவியர் ர் ஜெயகுமார் கலந்துக் கொண்டு, மாணவர்களுக்கு பரிசுகளை எடுத்து வழங்கினார்.

அவர் தம் உரையில், இவ்வகையான போட்டிகளில் அதிகமான தமிழ்ப்பள்ளிகள் கலந்துக் கொண்டு மேன்மேலும் நன்மை அடைய வேண்டுமென கேட்டுக்கொண்டார். மேலும் தகவல் தொடர்புத் தொழில்நுட்பத்தின் அவசியத்தையும், காலத்தின் கட்டாயத்தையும் விவரித்துக் கூறினார். தொடர்ந்து மாணவர்கள் தொழில்நுட்பத்தை கொண்டு, அவர்களின் திறனை மேம்படுத்தும் முயற்சிகளைத் தொடர வேண்டும் என்று வழியுறுத்தினார். மேலும் சிறந்த தொரு பணியைச் செய்து வரும் கோலக்கிள்ளான் இந்து இளைஞர் இயக்கத்திற்கும், தித்தியான் டிஜிட்டல் திட்டத்திற்கும் தனது நன்றியையும், பாராட்டுகளையும் தெரிவித்துக் கொண்டார். மேலும் எதிர்காலத்தில் தொழில்துறையிலும் தொழிநுட்பத்தை மேம்படுத்த வேண்டும் என்றும் அவர் அறிவுரை வழங்கினார்.

titian-digital-selangor-contest-22072017 (4)கோலாலம்பூர் & சிலாங்கூர் மாநில அளவிலான தகவல் தொடர்பு தொழில் நுட்ப புதிர்ப் போட்டியில் முதல் மூன்று நிலைகளில் வெற்றிப்  பெற்ற பள்ளிகள் பின்வருமாறு:

1st : SJKT Simpang Lima

2nd: SJKT Kajang

3rd: SJKT Kajang

மாநில அளவிலான போட்டியில் வெற்றிப்பெற்ற முதல் 20 நிலை வெற்றியாளர்கள், தேசிய ரீதியிலான போட்டிக்கு தகுதிப் பெற்றுள்ளனர்.