Home கலை உலகம் பிக்பாஸ்: காயத்ரிக்கு எதிராகத் திரும்பிய போட்டியாளர்கள்!

பிக்பாஸ்: காயத்ரிக்கு எதிராகத் திரும்பிய போட்டியாளர்கள்!

885
0
SHARE
Ad

BigbossGayathiriசென்னை – நேற்றிரவு ஞாயிற்றுக்கிழமை தமிழகத்தின் ஸ்டார் விஜய் தொலைக்காட்சியில் ஒளியேறிய ‘பிக் பாஸ்’ நிகழ்ச்சியில் எல்லோரையும் விட ஆகக் குறைந்த வாக்குகள் பெற்ற சக்தி வெளியேற்றப்பட்டார்.

சக்தி வெளியேறியதைத் தாங்க முடியாத காயத்ரி, கணேஷிடம் புலம்பி அழுதார். தனக்குப் பிடித்த ஜூலி, நமீதா, சக்தி எல்லோரும் போய்விட்டதால் இனி தன்னால் தனியாக இருக்க முடியாது என்று கண்ணீர் விட்டார்.

கண்ணீர் விட்டதோடு, கமல் முன்னால் தன்னைப் பற்றி பேசிய ரைசாவையும் தனது வழக்கமான பாணியில் வசை பாடினார்.

#TamilSchoolmychoice

இதனிடையே, இன்று திங்கட்கிழமை விஜய் தொலைக்காட்சி வெளியிட்டிருக்கும் விளம்பரத்தில், பிடிக்காதவர் மீது ஸ்பிரே அடிக்கும் டாஸ்க் கொடுக்கப்படுகின்றது.

அதில், காயத்ரி ரைசாவையும், ரைசா காயத்ரியையும் மாறி மாறி ஸ்பிரே அடித்து எலிமேசனுக்குத் தேர்வு செய்ய கணேஷ் உட்பட பெரும்பாலான போட்டியாளர்கள் காயத்ரியை ஸ்பிரே அடித்து நாமினேஷன் செய்வதாகக் காட்சிகள் உள்ளன.

இந்த வார புதுவரவு?

நேற்றைய நிகழ்ச்சி முடியும் போது, இந்த வாரத்தில் புதிய வரவுகள் வர வாய்ப்பு இருப்பதாக கமல்ஹாசன் குறிப்பிட்டார்.

இந்த வாரம் வருவது “உங்களுக்குப் பிடித்தவராக இருக்கலாம். உள்ளே இருப்பவர்களுக்குப் பிடிக்காதவராக இருக்கலாம்” என்று கமல் சொன்னது பலரையும் யோசிக்கவும் மகிழ்ச்சியும் படுத்தியிருக்கிறது.

ஏற்கனவே ஓவியா மீண்டும் பிக்பாஸ் வரப்போவதாக ஒரு தகவல் பரவி வருகின்றது.

அதேவேளையில், “யார், வருகிறேன் என்று ஒப்புக் கொண்டார்களோ அவர்கள் வருவார்கள்” என்று கமல் மீண்டும் அழுத்திச் சொன்னதையும் யோசிக்க வேண்டியிருக்கிறது.

அந்த வகையில் பார்த்தால், ஓவியா, பரணி இருவரில் யாராவது ஒருவர் மீண்டும் பிக்பாஸ் வீட்டிற்குள் வர வாய்ப்பு இருப்பதாக நம்பப்படுகின்றது. காரணம் இவர்கள் இருவருமே தானாக விருப்பப்பட்டு வெளியேறியவர்கள் என்பது குறிப்பிடத்தக்கது.