Home நாடு பிகேஆர் கட்சித் தலைவர்கள் ஹாடி அவாங்கைச் சந்தித்தனர்

பிகேஆர் கட்சித் தலைவர்கள் ஹாடி அவாங்கைச் சந்தித்தனர்

811
0
SHARE
Ad

HadiPKRleadersmeetகோலாலம்பூர் – கடந்த சனிக்கிழமை இரவு பாஸ் தலைவர் அப்துல் ஹாடி அவாங்கை, பிகேஆர் தலைவர்கள் சந்தித்து நலம் விசாரித்தனர்.

இது குறித்து பிகேஆர் துணைத் தலைவரும் சிலாங்கூர் மந்திரி பெசாருமான அஸ்மின் அலி வெளியிட்டிருக்கும் தகவலில், “அறுவை சிகிச்சை முடிந்து பல மாத ஓய்வுக்குப் பிறகு ஹாடி தற்போது நலமுடன் இருக்கிறார். இதற்கு முன்பு, அவருக்கு ஓய்வு தேவைப்பட்டதால், அவரைத் தொந்தரவு செய்ய வேண்டாம் என நாங்கள் கேட்டுக் கொள்ளப்பட்டோம்.”

“இரண்டு மாதங்களுக்குப் பிறகு, நான் மற்றும் பிகேஆர் தலைவர் டாக்டர் வான் அசிசா வான் இஸ்மாயில் ஆகியோர் அவரைச் சந்தித்து நலம் விசாரித்து, அவருக்காகப் பிரார்த்தனை செய்ய வேண்டும் என்று விரும்பினோம்”

#TamilSchoolmychoice

“இறைவனுக்குப் பிரார்த்தனைகள். நேற்று (சனிக்கிழமை) இரவு சந்திப்பின் போது, ஹாடி நன்றாக உடல் நலம் தேறி, தற்போது நல்லபடியாக இருப்பதைப் பார்க்க முடிந்தது” என்று அஸ்மின் தெரிவித்திருக்கிறார்.