Home இந்தியா கோரக்பூர்: குழந்தைகள் உயிரைக் காப்பாற்றிய மருத்துவர் நீக்கம்!

கோரக்பூர்: குழந்தைகள் உயிரைக் காப்பாற்றிய மருத்துவர் நீக்கம்!

751
0
SHARE
Ad

gorakhpur2கோரக்பூர் – உத்திர பிரதேச மாநிலம் கோரக்பூர் அரசு மருத்துவமனையில், ஆக்சிஜன் பற்றாக்குறையால், சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டிருந்த 70 குழந்தைகள் மரணமடைந்தனர்.

இச்சம்பவம் இந்தியா முழுவதும் பேரதிர்ச்சியை ஏற்படுத்தியிருக்கிறது.

எனினும், ஆக்சிஜன் பற்றாக்குறை என்ற காரணத்தை மறுத்திருக்கும் முதல் ஆதித்யநாத் தலைமையிலான உத்திர பிரதேச அரசு, ஆக்சிஜன் விநியோகம் செய்த நிறுவனத்தின் மீது வழக்குத் தொடுத்திருக்கிறது.

#TamilSchoolmychoice

இதனிடையே, மருத்துவமனையில் ஆக்சிஜன் பற்றாக்குறை ஏற்பட்ட போது, தனது நண்பரின் மருத்துவமனையில் இருந்து ஆக்சிஜன் சிலிண்டர்களை அரசு மருத்துவமனைக்கு வரவழைத்தும், தனது சொந்த பணம் 10,000 ரூபாயைச் செலவு செய்து 9 ஆக்சிஜன் சிலிண்டர்களை வாங்கியும் சுமார் 30-க்கும் மேற்பட்ட குழந்தைகளைக் காப்பாற்றிய மருத்துவர் கபில் கானை, உத்திர பிரதேச அரசு, குழந்தைகள் நல மருத்துவர் பொறுப்பில் இருந்து அதிரடியாக நீக்கியிருக்கிறது.

அதற்கான காரணம் இன்னும் அரசு சார்பில் சொல்லப்படவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.