Home இந்தியா உபி மருத்துவமனையில் 63 குழந்தைகள் பலி!

உபி மருத்துவமனையில் 63 குழந்தைகள் பலி!

1211
0
SHARE
Ad

UP government hospitalகோரக்பூர் – உத்தரப்பிரதேச மாநிலம் கோரக்பூர் பிஆர்டி மருத்துவமனையில், கடந்த ஆகஸ்ட் 7-ம் தேதி முதல் தற்போது வரை சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டிருந்த 63 குழந்தைகள் அடுத்தடுத்து பலியான சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியிருக்கிறது.

ஆக்ஸிஜன் வழங்கும் கருவிகளின் பற்றாக்குறை உள்ளிட்ட பல்வேறு காரணங்களால் தான் குழந்தைகள் உயிரிழந்ததாகக் குற்றச்சாட்டுகள் எழுந்துள்ளன.

இது குறித்து தற்போது உபி மாநில சுகாதாரத்துறை விசாரணை நடத்தி வருகின்றது.

#TamilSchoolmychoice

குழந்தைகள் மரணம் தொடர்பாக உபி முதல்வர் யோகி ஆதியநாத் தலைமையிலான அரசு மீது கடும் விமர்சனங்கள் எழுந்து வருகின்றன.