Home இந்தியா டிராக்டரைப் பறிமுதல் செய்யவிடாமல் தடுக்க உயிரையே விட்ட விவசாயி!

டிராக்டரைப் பறிமுதல் செய்யவிடாமல் தடுக்க உயிரையே விட்ட விவசாயி!

1069
0
SHARE
Ad

up-farmer-crushed-to-deathசிதாபூர் – உத்திர பிரதேச மாநிலத்தில் உள்ள சிதாபூர் என்ற கிராமத்தில், டிராக்டருக்கு வாங்கிய 5 லட்சம் கடனில் 1.25 ஆயிரம் கடன் பாக்கி வைத்திருந்த கியான் சந்திரா என்ற விவசாயியின் டிராக்டரை, கடந்த சனிக்கிழமை முகவர்கள் பறிமுதல் செய்ய முயற்சி செய்தனர்.

அப்போது தான் பணத்தை எப்படியாவது திரும்பக் கட்டிவிடுவதாகவும், டிராக்டரைப் பறிமுதல் செய்ய வேண்டாம் என்றும் கியான் சந்திரா முகவர்களிடம் கெஞ்சியிருக்கிறார்.

எனினும், முகவர்கள் டிராக்டரை நிலத்தில் இருந்து ஓட்டிச் செல்ல முயற்சி செய்திருக்கின்றனர்.

#TamilSchoolmychoice

ஆனால் கியான் சந்திரா விடாப்பிடியாக அதில் ஏற முயற்சி செய்திருக்கிறார். அப்போது முகவர்கள் அவரைப் பிடித்துத் தள்ளியதில் முன் பக்கச் சக்கரத்தில் விழுந்து அவர் உடல் நசுங்கி உயிரிழந்தார்.

இச்சம்பவம் உபி விவசாயிகள் மத்தியில் கடும் ஆத்திரத்தை ஏற்படுத்தியிருக்கிறது.

தற்போது இவ்வழக்கு கொலை வழக்காகப் பதிவு செய்யப்பட்டு, முகவர்கள் 5 பேரை உபி காவல்துறை தேடி வருகின்றது.