Home இந்தியா உபி மருத்துவமனையில் மேலும் 6 குழந்தைகள் மரணம்!

உபி மருத்துவமனையில் மேலும் 6 குழந்தைகள் மரணம்!

857
0
SHARE
Ad

UP government hospitalகோரக்பூர் – உத்திர பிரதேச மாநிலம் கோரக்பூரில் அரசு மருத்துவமனையில், ஆக்சிஜன் சிலிண்டர் பற்றாக்குறையின் காரணமாக, கடந்த வாரம் சிகிச்சையில் இருந்த 70 குழந்தைகள் மரணமடைந்தனர்.

இச்சம்பவம் நாடு முழுவதும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. இந்நிலையில், யோகி ஆதித்யநாத் தலைமையிலான உபி அரசுக்கு எதிராக எதிர்கட்சிகள் கடும் விமர்சனங்களை முன் வைத்தனர்.

ஆனால், உபி அரசு ஆக்சிஜன் பற்றாக்குறை என்பதை மறுத்து, ஆக்சிஜன் சிலிண்டர் விநியோகம் செய்த நிறுவனத்தின் மீது வழக்குத் தொடுத்தது.

#TamilSchoolmychoice

இதனிடையே, அதே மருத்துவமனையில் சிகிச்சைப் பெற்று வந்த மேலும் 6 குழந்தைகள் மூளை பாதிப்பால் உயிரிழந்திருப்பதாகத் தகவல்கள் வெளிவந்திருக்கின்றன.