Home இந்தியா இந்தியாவின் 71-வது சுதந்திர தினம் – பிரதமர் மோடி எழுச்சி உரை!

இந்தியாவின் 71-வது சுதந்திர தினம் – பிரதமர் மோடி எழுச்சி உரை!

855
0
SHARE
Ad

ModiAug15புதுடெல்லி – இந்தியாவின் 71-வது சுதந்திர தினம் இன்று செவ்வாய்க்கிழமை கொண்டாடப்பட்டு வருகின்றது.

இந்தியப் பிரதமர் நரேந்திர மோடி இன்று செங்கோட்டையில் தேசிய கொடி ஏற்றி எழுச்சி உரையாற்றினார்.

அவரது உரையில் கூறியதாவது:-

#TamilSchoolmychoice

“இளைஞர்களின் பங்களிப்பு இருந்தால், வரும் 2022-க்குள் புதிய இந்தியாவை உருவாக்க முடியும். அதற்கான உறுதிமொழியை இப்போதே எடுப்போம். சுதந்திரம் அடைந்த பின்னர், தற்போது வரை மின்சாரம் இல்லாத 14 ஆயிரம் கிராமங்களுக்கு மின்சாரம் கிடைத்திருக்கிறது. மக்களிடையே, ஜிஎஸ்டி-க்கும் ஒத்துழைப்பு கிடைத்து வருகின்றது. அதேபோல், ஆதார் அட்டையைக் கட்டாயமாக்கினால் தான் ஊழல் ஒழியும்” என்று தெரிவித்தார்.

மேலும், காஷ்மீர் மாநிலம் மீண்டும் சொர்க்க பூமியாக மாற்றப்படும் என்று மோடி உறுதியளித்தார்.