Home நாடு மலேசியாவில் இரசாயன முட்டைகளா?

மலேசியாவில் இரசாயன முட்டைகளா?

784
0
SHARE
Ad

Eggs (1)கோலாலம்பூர் – ஐரோப்பிய நாடுகளில் இருந்து இறக்குமதி செய்யப்படும் கோழி முட்டைகளில் ஃபிப்ரோனில் என்ற இரசாயனப் பொருட்கள் கலந்திருப்பதாக அண்மையில் ஊடகங்களில் தகவல் பரவியது.

இந்நிலையில், மலேசிய சுகாதாரத்துறை பொது இயக்குநர் டத்தோ டாக்டர் நூர் ஹிஷாம் அப்துல்லா வெளியிட்டிருக்கும் அறிக்கையில், மலேசியாவுக்கு ஐரோப்பிய யூனியன் பிரதேசங்களில் இருந்து முட்டையோ அல்லது முட்டை சார்ந்த பொருட்களோ ஏற்றுமதி செய்யப்படவில்லை என்பதை உறுதிப்படுத்தியிருக்கிறார்.

“வாடிக்கையாளர்களின் உடல்நலத்தைப் பாதிக்கும், அச்சுறுத்தும் பொருட்கள் குறித்து சுகாதார அமைச்சு மிகக் கவனமாகவும், அக்கறையுடனும் இருக்கின்றது. ஒருவேளை வாடிக்கையாளர்கள் ஏதாவது ஒரு உணவில் பாதுகாப்பு அச்சுறுத்தல் இருப்பதாகக் கருதினால், அருகில் உள்ள மாவட்ட சுகாதார அலுவலகத்தையோ அல்லது மாநில சுகாதாரத்துறையையோ அல்லது அதிகாரப்பூர்வ இணையதளம் (http://moh.spab.gov.my) வாயிலாகவோ அல்லது பேஸ்புக் (www.facebook.com/bkkmhq) வாயிலாகவோ தொடர்பு கொள்ளலாம்” என்று நூர் ஹிஷாம் அப்துல்லா தெரிவித்திருக்கிறார்.

#TamilSchoolmychoice