Home இந்தியா கோரக்பூர் மருத்துவமனையில் மீண்டும் கொடூரம்: 68 குழந்தைகள் பலி!

கோரக்பூர் மருத்துவமனையில் மீண்டும் கொடூரம்: 68 குழந்தைகள் பலி!

1030
0
SHARE
Ad

babyகோரக்பூர் – உத்திரப் பிரதேச மாநிலம் கோரக்பூர் அரசு மருத்துவமனையில் கடந்த ஆகஸ்ட் மாதம் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டிருந்த 100-க்கும் மேற்பட்ட குழந்தைகளில், பிராண வாயு கலன் பற்றாக்குறை காரணமாக 63 குழந்தைகள் பலியாகினர்.

அச்சம்பவம் ஏற்படுத்திய அதிர்வலைகள் அடங்குவதற்கு மீண்டும் கோரக்பூரில் கடந்த 4 நாட்களில் 68 குழந்தைகள் பலியாகியிருக்கின்றனர்.

உத்திரப்பிரதேச மாநிலத்தில், கடந்த 2014-ம் ஆண்டில் உயிரிழந்த குழந்தைகளின் மொத்த எண்ணிக்கை 4,391 ஆகவும், 2015-ம் ஆண்டு 5,236 ஆகவும், 2016-ம் ஆண்டில் 4,359 ஆகவும் இருந்தது குறிப்பிடத்தக்கது.

#TamilSchoolmychoice

2017-ம் ஆண்டு இதுவரையில் மொத்தம் 1,718 குழந்தைகள் உயிரிழந்திருப்பதாக புள்ளி விவரங்கள் தெரிவிக்கின்றன.