Home நாடு தடுப்புக் காவலுக்கு எதிரான ஷாபியின் மனு நிராகரிப்பு!

தடுப்புக் காவலுக்கு எதிரான ஷாபியின் மனு நிராகரிப்பு!

1218
0
SHARE
Ad

shafieகோத்தா கினபாலு – தனக்கு விதிக்கப்பட்ட நான்கு நாட்கள் தடுப்புக் காவல் உத்தரவை எதிர்த்து பார்ட்டி வாரிசான் சபா கட்சியின் தலைவர் டத்தோஸ்ரீ ஷாபி அப்டால் தாக்கல் செய்த மனுவை உயர்நீதிமன்றம் இன்று திங்கட்கிழமை நிராகரித்தது.

நீதிபதி இஸ்மாயில் பிராஹிம் அம்மனுவைத் தள்ளுபடி செய்ததோடு, ஷாபியின் தடுப்புக் காவலை நீட்டிக்கும் படி உத்தரவிட்டார்.

“நான் உங்களது மனுவை ஏற்றுக்கொள்ளவில்லை. நீதிபதியின் தடுப்புக் காவல் உத்தரவை நிலை நிறுத்துகிறேன்” என்று நீதிபதி இஸ்மாயில் அறிவித்தார்.

#TamilSchoolmychoice

சபாவில் கிராமப்புற மேம்பாட்டு நிதியில் 1.5 பில்லியன் ரிங்கிட் மோசடி செய்யப்பட்டது தொடர்பாக விசாரணை செய்ய, கடந்த அக்டோபர் 20-ம் தேதி ஷாபி கைது செய்யப்பட்டார் என்பது குறிப்பிடத்தக்கது.