Home நாடு “அபாண்டி அலி காவல் துறை புகார் செய்ய வேண்டும்” – கோபால் ஸ்ரீராம் வலியுறுத்து!

“அபாண்டி அலி காவல் துறை புகார் செய்ய வேண்டும்” – கோபால் ஸ்ரீராம் வலியுறுத்து!

909
0
SHARE
Ad

Gopal-sri Ramகோலாலம்பூர் – சர்ச்சைக்குரிய பிரபல இணைய எழுத்தாளர் ராஜா பெத்ரா கமாருடின் தனது ‘மலேசியா டுடே’ இணையத் தளத்தில் அரசாங்கத் தலைமை வழக்கறிஞர் டான்ஸ்ரீ முகமட் அபாண்டி அலி குறித்து தொடர்ந்து எழுதி வந்த இரண்டு கட்டுரைகளில் குற்றவியல் ரீதியான அவதூறு புதைந்திருப்பதால், அபாண்டி காவல் துறையில் புகார் செய்ய வேண்டும் என முன்னாள் நீதிபதியும், நாட்டின் பிரபல வழக்கறிஞருமான டத்தோ கோபால் ஸ்ரீராம் வலியுறுத்தியுள்ளார்.

அபாண்டி அலி எவ்வாறு அரசாங்கத் தலைமை வழக்கறிஞர் பொறுப்புக்கு வந்தார் என்பது குறித்தும் அதன் பின்னணியில் பாலிங் நாடாளுமன்ற உறுப்பினரும், அம்னோ பிரமுகருமான அப்துல் அசிஸ் எவ்வாறு செயல்பட்டார், முன்னாள் அரசாங்கத் தலைமை வழக்கறிஞர் கனி பட்டேல் எவ்வாறு வீழ்த்தப்பட்டார், போன்ற விவரங்கள் உள்ளடங்கிய கட்டுரைகளை ராஜா பெத்ரா எழுதியிருக்கிறார்.

ராஜா பெத்ரா தற்போது பிரிட்டனில் தங்கியிருந்து கொண்டு தனது கட்டுரைகளை எழுதிக் கொண்டிருக்கிறார் என நம்பப்படுகிறது.

#TamilSchoolmychoice

நாட்டின் அனைத்து இணைய ஊடகங்களிலும், நட்பு ஊடகங்களிலும் ராஜா பெத்ராவின் கட்டுரைகள் தற்போது அதிக அளவில் பகிர்ந்து கொள்ளப்படுகின்றன. காரணம் அந்த அளவுக்கு, சூடான தகவல்களை அந்தக் கட்டுரைகள் கொண்டிருக்கின்றன.

இதனைத் தொடர்ந்து அந்தக் கட்டுரைகள் குப்பைகள் என்றும், அவதூறானவை என்றும் ராஜா பெத்ரா மீது இறுதி வரை வழக்கு தொடர்வேன் என்றும் அபாண்டி அலி எச்சரித்திருக்கிறார்.

இந்த சூழலில்தான் முன்னாள் நீதிபதி கோபால் ஸ்ரீராம் தனது கருத்தைப் பதிவு செய்திருக்கிறார்.

ராஜா பெத்ரா மீது காவல் துறையில் புகார் செய்வது அல்லது அவதூறு வழக்கு தொடர்வது என அபாண்டி அலிக்குத் தேர்வுகள் இருந்தாலும், ராஜா பெத்ரா குறிப்பிட்டிருக்கும் புகார்கள் கடுமையானவை என்பதோடு அவை குற்றவியல் அவதூறுகள் (criminal defamation) என்பதால் அவை குறித்து அபாண்டி அலி காவல் துறையில் புகார் செய்ய வேண்டும் என ஸ்ரீராம் வலியுறுத்தியிருக்கிறார்.

deepavali-astro-banner