அப்பேரணியில் கலவரம் வெடிக்கும் அபாயம் இருந்ததால், நூற்றுக்கணக்கான காவல்துறையினர் அங்கு குவிக்கப்பட்டிருந்தனர்.
மேலும், காவல்துறைக்குச் சொந்தமான ஹெலிகாப்டர் ஒன்றும் அப்பகுதியை வட்டமடித்துக் கொண்டிருந்தது.
அப்போது, கூட்டத்தில் வன்முறை ஏற்பட்டு கலவரம் வெடித்தது. அதேவேளையில் கார் ஒன்று கூட்டத்திற்குள் புகுந்து பெண் ஒருவரை மோதியது. இதில் அப்பெண் மரணமடைந்தார்.
இச்சம்பவம் நடந்து சில நிமிடங்களில் ரோந்துப் பணியில் ஈடுபட்டிருந்த காவல்துறை ஹெலிகாப்டரும் பேரணி நடைபெற்ற இடம் அருகே விழுந்து நொறுங்கியது. இதில் இரண்டு காவல்துறையினர் பலியாகினர்.
Comments