Home இந்தியா பழனிசாமி யார்? என்பதைத் தெரிவிப்பேன் – தினகரன் அறிவிப்பு!

பழனிசாமி யார்? என்பதைத் தெரிவிப்பேன் – தினகரன் அறிவிப்பு!

559
0
SHARE
Ad

ttv-dinakaran-சென்னை – தன்னை கட்சியில் இருந்து நீக்கிய நடப்பு முதல்வர் எடப்பாடி பழனிசாமி யார் என்பதை இன்று திங்கட்கிழமை மாலை தெரிவிப்பேன் என டிடிவி தினகரன் இன்று அறிவித்திருக்கிறார்.

இது குறித்து இன்று செய்தியாளர்களைச் சந்தித்த தினகரன், “என் மீது சுமத்தப்பட்டிருக்கும் குற்றச்சாட்டுகள் அனைத்தும் போலியானவை. எங்களால் கொண்டு வரப்பட்டு பதவியில் அமர்ந்தவர் தான் பழனிசாமி. அவர் முதலமைச்சர் ஆனதே ஒரு விபத்து தான். ஆனால் ஏற்றிவிட்ட ஏணியையே எட்டி உதைக்கிறார்கள். பழனிசாமி பதவி கிடைத்துவிட்டதால் ஆடுகிறார். அவரை விரைவில் திருத்துவேன். அவர் யார் என்பதை இன்று மாலை அறிவிப்பேன். அவரை 420 என்று கூறியதைப் பற்றி எனக்கு எந்த வருத்தமும் இல்லை” என்று தினகரன் தெரிவித்திருக்கிறார்.

மேலும், எம்ஜிஆர் நூற்றாண்டு விழா, மிகப் பெரிய அளவில் மாநாடு போல் நடக்கும் என்றும் தினகரன் தெரிவித்திருக்கிறார்.