Home வணிகம்/தொழில் நுட்பம் சீன உணவகத்தில் உள்ளாடை அளவைப் பொறுத்து தள்ளுபடி!

சீன உணவகத்தில் உள்ளாடை அளவைப் பொறுத்து தள்ளுபடி!

706
0
SHARE
Ad

discount based on bra sizeஹங்சோ – சீனாவின் ஹங்சோ நகரில் அமைந்திருக்கும் டிரண்டி ஷிரிம்ப் ரெஸ்டோரண்ட் என்ற உணவகம், தங்களது கடைக்கு வரும் பெண் வாடிக்கையாளர்களுக்குத் தள்ளுபடி விலையை வழங்க ஒரு புதிய உத்தியைக் கையாண்டு கடும் விமர்சனத்திற்கு உள்ளாகியிருக்கிறது.

சாப்பாட்டில் தள்ளுபடி விலையைப் பெற பெண் வாடிக்கையாளர்கள் தங்களின் உள்ளாடை அளவைச் சொல்ல வேண்டும் என்றும், உள்ளாடை அளவு பெரிதாக உள்ளவர்களுக்கு அதற்கு ஏற்ப தள்ளுபடி விலை வழங்கப்படும் என்றும் அறிவித்திருந்தது.

இதற்கு அப்பகுதிவாசிகளிடமிருந்து கடும் எதிர்ப்பு வரத் துவங்கியதால், அந்த அறிவிப்பை மீட்டுக் கொண்டது.

#TamilSchoolmychoice

எனினும், அக்கடைக்கு வரும் பெண்கள், தங்களது உள்ளாடை அளவைக் கூறி, தள்ளுபடி விலையைப் பெற விரும்புவதாகத் தகவல்கள் கூறுகின்றன.

இதனிடையே, அக்கடையின் உரிமையாளர் ஊடகங்களுக்கு அளித்திருக்கும் பேட்டியில், இந்த அறிவிப்பிற்குப் பிறகு தங்களது உணவகத்தில் வாடிக்கையாளர்களின் வருகை 20 விழுக்காடு அதிகமாகியிருப்பதாகத் தெரிவித்திருக்கிறார்.