Home நாடு இளம் ஆய்வாளர்கள் அறிவியல் விழா 2017: பண்டார் கின்றாரா பள்ளி வாகை சூடியது!

இளம் ஆய்வாளர்கள் அறிவியல் விழா 2017: பண்டார் கின்றாரா பள்ளி வாகை சூடியது!

976
0
SHARE
Ad

scienceகோலாலம்பூர் – தேசிய அளவில் நடைபெற்ற இளம் ஆய்வாளர்கள் அறிவியல் விழா 2017-ல், பூச்சோங் பண்டார் கின்றாரா பள்ளி வெற்றிபெற்றது.

மலேசிய ஜெர்மன் கல்லூரில் நேற்று ஞாயிற்றுக்கிழமை நடைபெற்ற இவ்விழாவில், தாவரங்களில் உயிர்கழிவுகளை எடுத்து, பூச்சிகளை விரட்டப் பயன்படும் ஆய்வினைச் செய்த பூச்சோங் கின்றாரா தமிழ்ப்பள்ளியைச் சேர்ந்த மாணவர்கள் வெற்றியாளராக அறிவிக்கப்பட்டனர். அவர்களுக்கு 2000 ரிங்கிட் ரொக்கமும், சான்றிதழ்களும் வழங்கப்பட்டன.

நாடெங்கிலும் உள்ள தமிழ்ப்பள்ளிகளில் இருந்து 370 மாணவர் குழுக்கள் பங்கேற்ற இப்போட்டியில், 68 குழுக்கள், தேசிய அளவிலான இறுதிப்போட்டிக்குத் தேர்வாகினர்.

#TamilSchoolmychoice

இப்போட்டியை கல்வி அமைச்சு, தேசிய நில நிதிக் கூட்டுறவுச் சங்கம், செடிக், யாயாசான் மைநாடி ஆகியவை ஏற்பாடு செய்தன என்பது குறிப்பிடத்தக்கது.