Home நாடு ஜோகூர் இளவரசியின் திருமணம் சிறப்பாக நடைபெற்றது!

ஜோகூர் இளவரசியின் திருமணம் சிறப்பாக நடைபெற்றது!

680
0
SHARE
Ad

Johor royal coupleஜோகூர் பாரு – ஜோகூர் இளவரசி துங்கு துன் அமினா சுல்தான் இப்ராகிமும், டச்சு நாட்டில் பிறந்தவரான டென்னிஸ் முகமது அப்துல்லா ஆகிய இருவரும் இன்று திங்கட்கிழமை இஸ்தானா புக்கிட்டில் நடைபெற்ற திருமணச் சடங்குகளுகுப் பிறகு அதிகாரப்பூர்வமாக கணவன், மனைவியாக அறிவிக்கப்பட்டனர்.

இத்திருமண நிகழ்வு ஜோகூர் அரச பாரம்பரிய வழக்கப்படி, ஜோகூர் சுல்தான், சுல்தான் இப்ராகிம் இப்னி அல்மாரும் சுல்தான் இஸ்கண்டார் மற்றும் அரசி ராஜா ஜாரித் சோஃபியா அல்மாரும் சுல்தான் இட்ரிஸ் ஷா மற்றும் நெருங்கிய உறவினர்கள், நண்பர்கள் முன்னிலையில், மிகச் சிறப்பாக நடைபெற்றது.

அதேவேளையில், நெதர்லாந்தில் இருந்து மணமகனின் பெற்றோரான மார்டின் மற்றும் ஹென்ரிட்டே வெர்பாஸ், சகோதரர், சகோதரி மற்றும் அவர்களது நெருங்கிய உறவினர்கள், நண்பர்கள் ஆகியோரும் இதில் கலந்து கொண்டனர்.

#TamilSchoolmychoice