இது குறித்து ஏற்பாட்டாளர்கள் வெளியிட்டிருக்கும் செய்தி அறிக்கை பின்வருமாறு:-
“பரதப் போட்டி, ஆரம்பப் பள்ளி மாணவர்களுக்கான போட்டிகள், இடைநிலைப்பள்ளி மாணவர்களுக்கான போட்டிகள், பாரம்பரிய விளையாட்டு போட்டிகள் என பலதரப்பட்ட நிகழ்வுகள் இவ்விழாவில் நடந்தேறின. கிள்ளான் சுற்றுவட்டாரத்தை சார்ந்த சுமார் 3000 பேர் இந்நிகழ்வுகளில் கலந்து சிறப்பித்தனர்.”
“அவ்வகையில் தமிழ் விழாவின் முத்தாய்ப்பு நிகழ்வாய் கலை இரவு நாளை ஆகஸ்ட் 19 (சனிக்கிழமை), இரவு மணி 7.30க்கு கோலக்கிள்ளான் பண்டமாரான் ஜெயா நகராண்மைக் கழக மண்டபத்தில் (Dewan Serbaguna MPK Pandamaran Jaya) இனிதே நடைபெறவிருக்கிறது.”
“இக்கலை இரவில் நடனம், பாடல் போன்ற நிகழ்வுகளுடன் ஈகம் அங்கமும் சிறப்பித்தல் அங்கமும் நடைபெறும். பெருந்தலைவர் காமராசருக்கு ஈகம் செய்யும் அதே வேளையில் கோலக்கிள்ளான் திருக்குறள் மன்ற மேனாள் தலைவர் ந.முத்துகிருஷ்ணன் மற்றும் தெய்வீக வாழ்க்கைச் சங்கம் கோலக்கிள்ளான் உபகிளையின் மேனாள் தலைவர் குருபக்தி ரத்னா நா.சின்னதம்பி ஆகியோருக்கு சிறப்பு செய்யவிருக்கின்றோம்.”