Home இந்தியா அதிமுக அணிகள் இணைப்பு அறிவிப்பு இல்லை!

அதிமுக அணிகள் இணைப்பு அறிவிப்பு இல்லை!

576
0
SHARE
Ad

panneer selvam-palanisamy-comboசென்னை – வெள்ளிக்கிழமை இரவுக்குள் முன்னாள் முதல்வர் ஓ.பன்னீர் செல்வம் மற்றும் நடப்பு முதல்வர் எடப்பாடி பழனிசாமி அணிகள் இணையும் என்ற அறிவிப்பு எதிர்பார்த்தபடி வெளியிடப்படவில்லை.

இதுகுறித்து அதிமுக பேச்சாளர் ஒருவர் “இன்றிரவு பத்திரிக்கையாளர் சந்திப்பு எதுவும் நடைபெறாது. நாளை (சனிக்கிழமை) நாங்கள் பத்திரிக்கையாளர் சந்திப்பு நடத்தினால் உங்களுக்குத் தெரிவிப்போம்” எனப் பத்திரிக்கையாளர்களை நோக்கிக் கூறியதைத் தொடர்ந்து அனைவரும் கலைந்து செல்லத் தொடங்கினர்,

இரு அணிகளுக்கும் இடையில் நடந்த பேச்சுவார்த்தைகளில் இறுதி நேரத்தில் இரண்டு தரப்புகளுக்கும் இடையில் சில உடன்பாடுகள் ஏற்படாததைத் தொடர்ந்து, இணைப்பு அறிவிப்பு ஒத்தி வைக்கப்பட்டதாக அறியப்படுகிறது.