Home வணிகம்/தொழில் நுட்பம் கனடா தமிழ் இணைய மாநாடு கோலாகலமாகத் தொடங்கியது

கனடா தமிழ் இணைய மாநாடு கோலாகலமாகத் தொடங்கியது

1170
0
SHARE
Ad

தொரண்டோ – உத்தமம் எனப்படும் உலகத் தமிழ் தகவல் தொழில்நுட்ப மன்றத்தின் ஏற்பாட்டில் நடைபெறும் 16-வது தமிழ் இணைய மாநாடு ஆகஸ்டு 25-ஆம் நாள் கனடாவில் உள்ள தொராண்டோ பல்கலைக்கழகத்தில், அனைத்துலக அளவிலான பங்கேற்பாளர்களுடன் கோலாகலமாகத் தொடங்கியது.

infitt-16 conf-canada-25082017திறப்புவிழாவிற்குப் பின். இ-வ : பேராசிரியர் பொன்னவைக்கோ, முனைவர் கல்யாணசுந்தரம், கஸ்தூரி இராமலிங்கம், பேராசிரியர் செல்வகுமார், முத்து நெடுமாறன், முனைவர் வாசு அரங்கநாதன்,  முத்துலிங்கம், சங்கரபாண்டி, சொர்ணம், மருத்துவர் சம்பந்தன்.

தமிழ் வணக்கம், கனடா நாட்டுப்பண், வரவேற்பு நடனம் – இவற்றோடு தொடங்கிய மாநாட்டில், மாநாட்டுக் குழுத் தலைவர் பேராசிரியர் செல்வகுமார் வரவேற்புரை ஆற்றினார். பாரத் பல்கலைக்கழக இணைவேந்தர் பேராசிரியர் மு. பொன்னவைக்கோ சிறப்புரை ஆற்றினார்.

#TamilSchoolmychoice

முதலாவது முகாமை உரையாற்றிய வாட்டர்லூ பல்கலைக்கழகப் பேராசிரியர் ஆன்றூ வாங்கு, ஆழக் கற்றல் வழி அடிக்கடித் தோன்றும் தொடர்களை எவ்வாறு கண்டறிவது என்பது குறித்தும், அவற்றைக் கொண்டு பல்வேறு துறைகளில் அடுத்து நடைபெறவிருக்கும் நிகழ்ச்சிகளை எவ்வாறு கணிப்பது என்பது குறித்தும் பேசினார்.

ஒரு கட்டுரையில் உள்ள எழுத்துகளைக் கொண்டு, அது எதைப் பற்றிய கட்டுரை என்பதை கணினிக் கட்டளைகளின் வழி எவ்வாறு கணிப்பது என்று ஓர் எடுத்துக் காட்டைக் காட்டி அவர் விளக்கினார்.

மலேசியா, சிங்கப்பூர், இந்தியா, இலங்கை, அமெரிக்கா, கனடா நாடுகளில் இருந்து பல பேராளர்கள் இந்த மாநாட்டில் கலந்து கொண்டனர்.

உத்தமம் அமைப்பின் தோற்றுநர்களும் தொடக்க கால உறுப்பினர்கள் பலரும் இந்த மாநாட்டில் கலந்து கொண்டது இந்த 16-வது மாநாட்டின் குறிப்பிடத் தக்கச் சிறப்பு அம்சங்களில் ஒன்றாக அமைந்தது.