Home நாடு காற்பந்து: இந்தோனிசியாவை தோற்கடித்து இறுதி ஆட்டத்தில் மலேசியா!

காற்பந்து: இந்தோனிசியாவை தோற்கடித்து இறுதி ஆட்டத்தில் மலேசியா!

1118
0
SHARE
Ad

sea games-football-banner-indo-malaysiaஷா ஆலாம் – பெரும் பரபரப்புக்கிடையில் நேற்று சனிக்கிழமை இரவு நடைபெற்ற சீ கேம்ஸ் காற்பந்து போட்டிகளின் அரை இறுதி ஆட்டத்தில் 1-0 கோல் எண்ணிக்கையில் இந்தோனிசியாவைத் தோற்கடித்த மலேசியா இறுதி ஆட்டத்தில் நுழைந்துள்ளது.

மலேசியாவின் முன்னணி ஆட்டக்காரர் என்.தனபாலன், வெற்றிக்குக் காரணமான ஒரே கோலை இறுதி நேரத்தில் புகுத்தி, மலேசியாவை வெற்றிப் பாதையில் கொண்டு சென்றதன் மூலம் மலேசிய இரசிகர்களின் ஹீரோவாகத் திகழ்கின்றார்.

முதல் பாதி ஆட்டம் வரை இரண்டு குழுக்களும் கோல் ஏதும் அடிக்காமல சமநிலையில் இருந்தன.

#TamilSchoolmychoice

இந்தோனிசிய கொடி தலைகீழாகக் காட்டப்பட்டதன் காரணமாக இருநாடுகளுக்கும் இடையில் சில சர்ச்சைகள், தகராறுகள் இருந்து வந்த நிலையில், பரபரப்பான நேற்றைய ஆட்டத்தைக் காண சுமார் 80 ஆயிரத்துக்கும் மேற்பட்ட காற்பந்து இரசிகர்கள் ஷா ஆலாம் அரங்கில் குவிந்தனர்.

அடுத்த செவ்வாய்க்கிழமை காற்பந்து போட்டியின் இறுதி ஆட்டம் மலேசியா-தாய்லாந்து நாடுகளுக்கிடையில் புக்கிட் ஜாலில் அரங்கில் நடைபெறும்.

தற்போது நடப்பு வெற்றியாளராக தாய்லாந்து திகழ்கிறது. 2011-ஆம் ஆண்டு சீ விளையாட்டுப் போட்டிகளில் மலேசியா இறுதி ஆட்டத்தில் வெற்றி பெற்று தங்கப் பதக்கத்தைப் பெற்றது.