பத்தாங் காலி – வரும் ஆகஸ்ட் 31-ம் தேதி, மலேசியாவின் 60-வது சுதந்திர தினத்தை முன்னிட்டு, தேசிய வகைத் தமிழ்ப்பள்ளி, பத்தாங் காலி தோட்டத்தில், கடந்த ஆகஸ்ட் 24-ம் தேதி, சுதந்திர தினக் கொண்டாட்ட விழா நடைபெற்றது.
இவ்விழா, சிலாங்கூர் மாநில காவல்துறைத் தலைமையகத்தின் குற்றத்தடுப்பு மற்றும் சமூகப் பாதுகாப்பு தலைமையகத்தின் தலைவர் டத்தோ கே.குமரன் முன்னிலையில் மிகச் சிறப்பாக நடைபெற்றது.
மேலும், இவ்விழாவில், சிலாங்கூர் அம்னோ, தேசிய முன்னணித் துணைத் தலைவரும், பத்தாங் காலி சட்டமன்ற உறுப்பினருமான டத்தோ மாட் நட்சாரி அகமட் டாலான், உலுசிலாங்கூர் வட்டார காவல்துறைத் தலைவர் லிம் பாக் பாய், காவல்துறைத் துணை ஆணையர் சக்காரியா, டத்தோ பி.எஸ்.சாமி, வி.முகிலன், ராவாங் தீயணைப்பு மற்றும் மீட்புக் குழுவின் பிரிவு 6, அதிகாரி மகேந்திரன், பத்தாங் காலி சட்டமன்ற உறுப்பினரின் சிறப்பு அதிகாரி சிதம்பரம், டத்தோஸ்ரீ பாலா, எல்பிஎஸ் தலைவர் ராஜாமணி, உலுயாம் பாரு மற்றும் ராசா பகுதியைச் சேர்ந்த தன்னம்பிக்கைப் பேச்சாளர் டாக்டர் அழகன் ஆகியோருடன் பத்தாங் காலி காவல்நிலைய அதிகாரிகள், உள்ளூர் தலைவர்கள் மற்றும் பெற்றோர்கள் இவ்விழாவில் கலந்து கொண்டு சிறப்பித்தனர்.
மேலும், மாணவர்களின் அணிவகுப்பு மற்றும் சுதந்திர தினம் பற்றிய நாடகங்களும் தலைவர்கள் முன்னிலையில் நடைபெற்றது.
செய்தி, படங்கள்: பெற்றோர் ஆசிரியர் சங்கம், தேசிய வகைத் தமிழ்ப்பள்ளி, பத்தாங் காலி தோட்டம்.